பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பாண்டியன் (57) , கூடல் (66,91,92), வையை (97), பொதியில் (57) மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களோ அவர்தம் ஊர்களோ பிறவோ குறிக்கப்படவில்லை. இது கவனிக்கத்தகும் செய்தியாகும்.

5. ஒவ்வொரு கலியிலும் ஒரே துறை அமைந்த பல பாடல்கள் சுவையற்ற நிலையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, தலைவன் மடலூர்தல் பற்றி நான்கு பாடல்களும் (138-141), காமவெறி கொண்ட தலைவி பிதற்றல் பற்றி ஆறு பாடல்களும் (143-148) வந்துள்ளன.

6. சில செய்யுட்கள் தோழி-தலைவி உரையாடல் (60) தலைவி-தலைவன் உரையாடல் (64), தோழிதலைவன் உரையாடல் (61) முறையில் அமைந்துள்ளன.

7. பிற அகநூல்களில் காணப்பெறாத "நின்றித்தை" (98),'போசீத்தை'(93), பாடித்தை" (130), இஃதொத் தன் (84) போன்ற சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

8. நற்றிணை முதலிய நூல்களில் காமக்கிழத்தி பேசுவ, தாகச் செய்யுள் இடம் பெறவில்லை. ஆயின், இந்நூலில் சில செய்யுட்கள் (69, 72, 73) இடம் பெற்றுள்ளன.

9. கலிப்பாக்களில் வரும் பெரும்பாலரான தலைவன் தலைவியர் வினைவல பாங்கர் ஆதலால் தலைவி, தலை வனை ஏடா என்றும் தலைவன் தலைவியை ஏடி’ என் றும் அழைப்பதைக் காண்கிறோம் (87, 90).

10. மருதக் கலியில் வந்துள்ள கூனி-குறளன் காதல் உரையாடல் (94) நற்றிணை முதலிய நூல்களில் காணுமாறு இல்லை. -

11. வியாழனும் வெள்ளியும் வடமொழியில் அற நூல்கள் எழுதியுள்ளனர். அந்நூல்களின்படி நாடாண் டவனே' என்று தலைவன் ஒரு செய்யுளில் (99) அழைக்கப் படுகிறான். இத்தகைய செய்தி வேறு தொகை நூல்களில் இல்லை என்பது கவனிக்கத்தகும்,