பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


பகுதிவருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுகள் பாகம் கொடுத்தான் என்று அவனைப் பற்றிய பதிகம் கூறுகிறது.

மூன்றாம் பத்தைப் பாடியவர். பாலைக் கெளதமனார் என்பவர். சேரன் அவர் விருப்பப்படி பத்துப் பெருவேள்விகளைச் செய்வித்து அவரையும் அவர் மனைவியையும் துறக்கம் புகுவித்தான். நான்காம் பத்தைப் பாடியவர். காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். சேரன் அவருக்கு நாற்பதுநூறாயிரம் பொன் பரிசளித்தான்; தான் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியையும் கொடுத்தான். ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர் என்பவர். சேரன் உம்பற்காட்டு வாரியை அவருக்கு அளித்தான்.

ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்பவர். சேரன் அவருக்கு ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பரிசிலாய் வழங்கினான். ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர் என்பவர். சேரமான் அவருக்கு நூறாயிரம் காணம் பரிசில் கொடுத்தான்; "நன்றா” என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் அவருக்கு வழங்கினான். எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில் கிழார் என்பவர். சேரன் அவருக்கு ஒன்பது நூறாயிரம் காணம் வழங்கினான்; தன் அரசாட்சியையும் கொடுத்தான். புலவர் ஆட்சியை அவனிடமே ஒப்பு வித்தார்; தாம் அவனுக்கு அமைச்சராய் அமர்ந்தார். ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றுார் கிழார் என்பவர். சேரன் அவருக்கு முப்பத்தோராயிரம் பொன் கொடுத்தான், அவருக்குத் தெரியாமல் ஓர் ஊரையும் மனையையும் வழங்கினான்; அம்மனையில் செல்வத்தை நிரப்பினான்.

பதிற்றுப்பத்தின் காலம் : மேலே கூறப்பெற்ற சேர மன்னர் எண்மருள் ஐந்தாம் பத்துக்கு உரியவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஆவன். இவனே வடவரை வென்று கண்ணகிக்குக் கல் கொண்டு வந்த சேரன் செங்குட்டுவன் என்று பதிகம் பகர்கின்றது. இவன் கயவாகு