பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்


அரசர் ஒழுக்கம் : பாண்டியன் நெடுஞ்செழியன், "'எனது நாட்டின்மீது படையெடுத்து வரும் பகைவரையான் வெல்லேனாயின், என்குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று பழி தூற்றுவர் ஆகுக: மாங்குடி மருதனைத் தலைவனாகப் பெற்ற புலவர் கூட்டம் எனது நாட்டைப் பாடாது ஒழிவதாகுக. இல்லை யென்று இரப்பவர்க்கு இல்லை’ யென்று சொல்லும் வறுமையை யான் அடைவேனாகுக ! {72), என்று சூளுரைத்தான்.

பூதப் பாண்டியன், என் பகைவரை யான் வெல்லேனாயின், யான் என் மனைவியை விட்டு நீங்குவேனாகுக; அறநெறி தவறாத அவைக்களத்தில் தகுதியற்ற ஒருவனை வைத்து முறைதவறிக் கொடுங்கோல் செய்தவன் ஆகுக: என் சிறந்த நண்பர்களும் நல்லவர்களுமாகிய மாவன், ஆந்தை அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியோர் நட்பினைத் தப்பினவன் ஆகுக; பல உயிர்களையும் பாதுகாக்கும் பாண்டியர் அரசமரபிலிருந்து யான் மாறிப் பிறப்பேனாகுக. (71) என்று சூளுரைத்தான்.

சோழன் நலங்கிள்ளி, யான் என் பகைவரை வெல்லேனாயின், பொதுப் பெண்டிர் மார்பில் எனது மாலை துவள்வதாகுக. (73) என்று சூளுரைத்தான். இம்மூன்று சூளுரைகளிலிருந்தும் சங்ககாலத் தமிழரசர் ஒழுக்கத்தின் உயர் வினை நாம் நன்கு அறியலாம்.

தமிழ்ப் புலவர்கள் : புலவர்கள் வறுமையில் வாடினும் உயர்ந்த பண்பாடு பெற்றிருந்தனர். புலவர் தம் மதிப்பை இழக்க விரும்பாதவர்;

முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின் நீதல் யாம்வேண்டலமே' (205)

என்று இறுமாந்து கூறியவர்; அரசரிடமிருந்து மரியாதையையும் பொருள் உதவியையும் பெற விழைந்தவர்; மன்னர் தமக்கு உதவி செய்யத் தாழ்க்கினும், தாமே நேரில் வந்து