பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

பாகப் புலப்படுத்துவாள். அங்ஙனம் புலப்படுத்துதல் தோழி. அறத்தொடு நிற்றல்’ எனப்படும்.

அறத்தொடு நிற்றல்

களவுப் புணர்ச்சியால் தலைவியின் வேறுபாடு கண்ட தாய்மார் தோழியை வினவுவர். தோழி களவை வெளிப்படக் கூறாமற் கூறும் திறன் அறிந்து வியக்கற்பாலது.

(1), “தலைவியும் நாங்களும் சுனையில் நீராடுகையில் தலைவி கால் தவறிச் சுனையில் வீழ்ந்துவிட்டாள், நாங்கள் அலறினோம். அவ்வமயம் கட்டழகுள்ள இளைஞன் ஒருவன் அங்குத் தோன்றினான்; சரேரென நீரிற் குதித்தான்; தலைவியை அணைத்துக்கொண்டு சுனையினின்றும் வெளிப் போந்தான். தன் உயிரைக் காத்த அவ்வண்ணல்பால் தலைவி உள்ளம் நெகிழ்ந்தாள்.

(2) “தலைவியும் யாங்களும் பூப்பறிக்குங்கால் தலைவி விரும்பியதொரு பூவை நாங்கள் பறிக்கக்கூட வில்லை. தலைவி வாட்டமுற்றாள். அப்பொழுது நம்பி ஒருவன் தோன்றி அம்மலரைப் பறித்துத் தலைவியின் கையிற் கொடுத்தான். தலைவி அவன்பால் நன்றியறிதல் உடையவள் ஆயினாள்.

(3) “பண்டொருநாள் யாங்கள் விளையாடிக்கொண் டிருந்தபோது காட்டானை ஒன்று மதங்கொண்டு எங்களை நோக்கி ஓடிவந்தது. தலைவி அலறினாள். அவளது மையுண்ட கண்களிலிருந்து நீர் அருவிபோலப் பெருகியது. அவ்வமயம் கையில் வேலேந்திய இளைஞனொருவன் அங்குத் தோன்றினான். அச்சத்தால் அலறிய தலைவியைத் தன் இடக்கையால் அணைத்து நின்று, வலக்கையில் தாங்கிய வேலால் யானையைக் குத்தினான்; யானை பிளிறிக் கொண்டு ஓடியது. தன் உயிரைக் காத்த அத்தலைவன் பால் தலைவியின் உள்ளம் ஈடுபட்டது. இங்ஙனம் கூறுதல் முறையே புனல்தரு புணர்ச்சி, பூத்தரு புணர்ச்சி, களிறுதரு