பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 111 'நந்தனார் சரித்திரத்திலே சேரிப் பறையர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நந்தனாரையும் அவரது கட்சியாரையும் பழிக்கிறார்கள். சேரியிலே மாட்டிறைச்சியுண்டு புலை வாழ்வு வாழ்ந்து கொண்டு ஆண்டைப் பார்ப்பானுக்கு அடிமை செய்வதே சுவர்க்க மென்றறியாமல் சிதம்பரப் பயித்தியம் கொண்டலையும் நந்தனாராலும், அவர்களுடைய சீடர்களாலும், பெரிய கேடுகள் விளையக் கூடுமென்று வருத்தம் கொண்டு "நாம் என்ன செய்வோம் புலையரே இந்தப் பூமியில் இல்லாத புதுமையைக் கண்டோம்” என்று யோசிக்கிறார்கள். அந்தப் பாட்டின் கருத்தையும் வர்ணமெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. மேத்தா, கோகலே முதலிய நிதானஸ்தர்கள் நமது தேச விமோசனமென்னுஞ் சிதம்பரத்தை எண்ணி ஆசை கொண்டு பரவச நிலையிலிருக்குந் திலக முனிவராலும், அவரது கட்சியாராலும் நாட்டிற்குக் கெடுதி விளையுமென்று பேசும் விஷயங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்று பாரதியார் கூறியுள்ளார். “ஸ்வசரிதை” என்னும் பாடல் தொகுப்பின் முகவுரையில் பாரதி பின்வருமாறு எழுதியிருக்கிறார் : “இச்சிறிய செய்யுள் - நூல் விநோதார்த்தமாக எழுதப் பட்டது. ஒரு சில பாட்டுக்கள் இன்பமளிக்கக் கூடியவானாலும் பதர் மிகுதியாகக் கலந்திருக்கக் கூடும். இதன் இயல்பு தன் கூற்றெனப்படும். அதாவது கதாநாயகன் தன் சரிதையைத் தான் நேராகவே சொல்லும் நடை. இக்காவிய முறை நவீனமானது. இஃது தமிழ் அறிந்த நூலோர்கள் அங்கீகரிக்கத் தக்கதுதானா என்று பார்த்திடும் பொருட்டுச் சிறிய நூல் ஒன்றை முதலில் பதிப்பிடுகிறேன். இதனைப் பதம் பார்த்து. மேலோர் நன்றென்பாராயின் இவ்வழியிலே வேறு பல வெளியாக்குவேன்.