பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ. சீனிவாசன் 129 முன்னுரையின் 6-ம் பகுதியில் “இனி இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாகக் கருதிடல் அவசியமென்கையில் அப்போது கடவுளை நம்புவதெதன் பொருட்டு? கடவுள் நம்மை அச்சந்தீர்த்துக் காப்பார் என்று எதிர் பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும் வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் எல்லாம் கடவுள் செயல். ஆகையினாலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டும் என்று பகவத் கீதை சொல்லுகையில் நமக்குக் கடவுளின் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்றுானுடன் கட்டியாரேனும் கடலுள் வீழ்த்தினால் நாம் அதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி அப்போது நமச்சிவாய, நமச்சிவாய என்று கூவி நம்மைக் காத்துக் கொள்ள ஏன் முயல வேண்டும்? என்று சிலர் ஆகூேடிபிக்கலாம். அந்த ஆக்ஷேபம் தவறானது. யாங்ங்னமெனில் சொல்லுகிறேன். முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச் சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினால் அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனம் சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கை இழந்து விடாமல் இருப்போமாயின் அப்போது நமக்குள் ஈசனே வந்து குடி புகுகிறான். அப்போது நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா. மரணம் நம்மை அணுகாது. எல்லா விதமான ஐயுறவுகளும் கவலைகளும் துயரங்களும் தாமாகவே நம்மை விட்டு நழுவி விடுகின்றன. இந்த உலகத்திலேயே, நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்” என்றும் பாரதியார் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.