பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் 134 சாதாரண ஞானத்தைக் கைக் கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாகும். சாதாரண ஞானமென்று சொல் மாத்திரத்தில் அது எல்லோருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின் படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின் படி நடக்க வொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதாதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தின் தெளிவான கொள்கை யாதெனில் நம்மை மற்றொர் நேசிக்க வேண்டுமென்றால் நாம் மற்றோரை நேசிக்க வேண்டுமென்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்” என்று பாரதியார் ஒரு புதிய தெளிவான கருத்தை தனது உரைநடை வாசகத்தில் குறிப்பிடுவதைக் காண்கிறோம். முன்னுரை 13-ம் பகுதியில் கடவுள் ஓயாமால் தொழில் செய்து கொண்டேயிருக்கிறார். அவர் அண்ட கோடிகளைப் படைத்த வண்ணமாகவும், காத்த வண்ணமாகவும், அழித்த வண்ணமாகவும் இருக்கிறார். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுளால் செய்ய முடியுமா? கடவுள் கர்மயோகிகளிலேச் சிறந்தவன். அவன் ஜீவாத்மாவிற்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான். சம்சாரத்தை விதித்திருக்கிறான். குடும்பத்தை விதித்திருக்கிறான், மனைவி மக்களை விதித்திருக்கிறான், சுற்றத்தாரையும், அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்த ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்தானே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய் விடமாட்டாது. எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும், மரம், செடி கொடிகளாகிய உயிர்ப்பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ