பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில்-பாரதியின்-உரைநடை-அ.-சீனிவாசன் 15: அனுபவங்கள் ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிய படிப்பு, இந்திய நாட்டின் அரசியல் வளர்ச்சி ஆகியவற்றின் அனுபவத்தில் தான் அதுவரை பணியாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சித்தாந்த சிந்தனை, அரசியல் கொள்கைகள் அவைகளின் செயல்பாடு, அமைப்பு நிலைப்பணிகள், அணுகும் முறை ஆகிய பல பிரச்னைகளிலும் தனக்குச் சொந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைமையின் கீழ் சமுதாயப் பணி ஆற்றிவருகிறார். ஒரே நாடு பத்திரிகை, மற்றும் விஜய பாரதம் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியும் எழுதியும் வருகிறார். அத்துடன் சொந்தமாகவும், பாரதி, கம்பன், சிலப்பதிகாரம், திவ்யப் பிரபந்தம் தொடர்பான பல நூல்களும் எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டும் வருகிறார். அதன்படி பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி, பாரதியின் புதிய ஆத்திசூடி. ஒரு விளக்கவுரை, சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள், கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், பாரதியின் தேசீயம் ஆகிய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கு உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருக்கிறது. அத்துடன் திரு. அ. சீனிவாசன் எழுதிய சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்-ஒரு ஆய்வு என்னும் நூலை பிரபல புத்தக வெளியிட்டு நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கிறது. மேலும் திரு. அ.சீனிவாசன் எழுதி முடித்து அச்சில் உள்ள, ஆழ்வார்களும், பாரதியும், கம்பன் ஒரு சமுதாயப் பார்வை, கம்பன்