பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் பாதியின்_உருைடைஅடக்னிவாசன் 31 என்று கூறுகிறார். இப்பகுதியில் கம்பனுடைய தமிழ்ச் சொல்வளம் பெருமைக்குரியது. தமிழ் இலக்கணம் சிறப்பு மிக்கது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது. இராவணனைப் பற்றிக் குறிப்பிடும் போது, வீணையின் இசைபட வேதம் பாடுவான்” என்றும், “காமன் வெம்சரம் படக் கருகும் மேனியான்” என்றும் வேரொடும் அமரர் தம் புகழ் விழுங்கினான்”, என்றும், “உலகெலாம் மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான்” என்றும், இவ்வாறு இராவணனைப் பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறர். இராவணன் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த போது அவனுடைய பிரகாசமான முகப்பொலிவைப் பற்றிக் குறிப்பிடும் போது, “தம்மடங்கு முனிவரையும், தலை அடங்க, நிலை அடங்கச் சாய்த்த நாளின், மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்களம்மா!” என்று கூறுகிறார். அனுமனைப் பற்றிக் கம்பன் மிகச் சிறப்பாகப் பல நல்ல சொற்களில் கூறுகிறார். "தன்பெரும் குணத்தால் தன்னின்தான் அலது ஒப்பிலாதான்” என்று மாருதியைக் குறிப்பிடுகிறார். அத்துடன், அனுமனுக்கு இராமன் தன் வாயால், சொல்லின் செல்வன்” என்று பட்டமளிக்கிறான். இது மிகச் சிறந்த சொற்றொடராகும். இச்சொற்களில் ஆற்றல், நிறைவு, கல்வி