பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pfl:Ounii susnită fulli, um39uiler a-sousen- - el farfleurerii 35 நுண்கலைகள் இன்பநுகர்வு, அழகியல் ரசனை, மகிழ்ச்சியான மனித வாழ்க்கைக்கு அவசியமான பல சாதனங்கள் ஆகியவைகளும் அவசியமாகி அவைகளும் அதிகரிக்கின்றன. இவைகளையெல்லாம் திருமாலின் இராமாவதாரத்தின் தொடக்கத்தில் காண்கிறோம். வளர்ந்து கொண்டிருக்கும் சமூகப் பொருளாதார தேவைகளுக்கேற்ப அவைகளை உற்பத்தி செய்யவும், உருவாக்கவுமான சாதனங்களும் கருவிகளும் உழைப்பின் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதற்கேற்றவாறு மொழியின் வளர்ச்சியும் விரிவுபடுகிறது. தமிழ் அறிஞர்களும் தமிழை இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாகப் பிரித்துத் தமிழ் மொழியை மேம்படுத்தியுள்ளனர். மூன்று துறைகளிலும் தமிழ் வளர்ச்சி பெற்றுவந்திருக்கிறது. தொடர்ச்சியான சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு அமைதியான சமுதாய வாழ்வும் வாழ்க்கைத் தேவைகளின் சுய தேவைப் பூர்த்தியும் உபரியும் அவசியமாகிறது. இங்கு வாழ்க்கைத் தேவைகள் என்று கூறும்போது அது பொருளாயத லெளகீகத் தேவைகள் மட்டுமல்லாமல், அதில் அறிவுத் தேவைகளும், ஆன்மீகத்தேவைகளும் அடங்கும். அதற்கான முறையில் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்தவும் முறைப்படுத்தவும் மேற்பார்வை செய்யவும், அரசுகள் அவசியமாயிற்று. அத்துடன் உள்நாட்டுக் குழப்பங்களையும் சமூக விரோதச் செயல்களையும் ஒடுக்கி ஒழுங்கு படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும், வெளி நாட்டுப் படையெடுப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், காட்டு மிருகங்களின் தாக்குதல்களிலிருந்து மக்களையும், கால்நடைச் செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு காவல் அமைப்பு அவசியமாயிற்று. அதுவே அரசுகளின் தோற்றத்திற்குக்