பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உரைநடை காலத்தின் தொடக்கம் 48 4. உரைநடை காலத்தின் தொடக்கம் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு காலங்களிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பிய நாடுகளின் அன்னிய வாணிபம், கடல் கொள்ளை, காலனி பிடித்தல், தொழில் புரட்சி, சுதந்திர வியாபாரம் முதலியவைகள் காரணமாக அந்நாடுகளில் செல்வம் பெருகி புதிய பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. புதிய நவீன எந்திரத் தொழில்கள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன. நீராவி சக்தியும் அதன் பயன்பாடும் கண்டுபிடிக்கப்பட்டு அவை செயல்பாட்டிற்கு வந்தன. புதிய விசைச் சக்திகள் உற்பத்தித்துறையில் செயல்பாடுகளுக்கு வந்தன. நீராவி எந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. உற்பத்தி சக்திகள் அபரிமிதமான அளவில் வளர்ச்சி பெற்றன. அச்சு எந்திரங்கள், பேப்பர் மற்றும் இதர கல்வி சாதனங்கள் பெருகின. நவீன விஞ்ஞானக் கலைகளும், சோதனைக் கூடங்களும் இலக்கியங்களும் சமூக அறிவியல் இலக்கியங்களும் பெருகின. மேலை நாடுகளில் பலவற்றில் மன்னராட்சி முறைகள் மாறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைகள் தோன்றி நிலைபெறத் தொடங்கின. கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் தலைமை ரோமாபுரியில் இருந்த தலைமை மதகுரு போப் அவர்களிடம் இருந்தது. அந்த மதத் தலைமைக்கு எதிராக ஐரோப்பாவில் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டின் தேசீய மதத் தலைமை நிறுவனங்கள் உருவாகி அந்தந்த நாடுகளில் நிலைபெற்றன. மன்னராட்சியுடன் இணைந்து கிறிஸ்தவ மத நிறுவனங்கள், மடாலயங்கள் ஆகியவை சேர்ந்து மக்களிடம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நிலைமை மாறத் தொடங்கியது. கிறிஸ்தவ மத நிறுவனங்கள் கிறிஸ்தவ மடாலயங்கள் குறிப்பாக கத்தோலிக்க சபைகளின் ஆதிக்கம்