பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 49 குறைந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மதச் சார்பற்ற அரசுகள் தோன்றின. ஐரோப்பிய மக்களிடம் பெரிய அளவில் மறுமலர்ச்சி ஏற்பட்டு தீவிரமான கலாச்சார மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. மக்களுக்கிடையில் மதச் சீர்திருத்தப் பிரச்சாரங்களும் பகுத்தறிவுப் பிரச்சாரங்களும், ஜனநாயகப் பிரச்சாரங்களும் மதக் கொலைகளுக்கும் எதேச் சதிகார ஆட்சிகளுக்கெதிரான பிரச்சாரங்களும் விழிப்புணர்வுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்தன. புதிய பல கருத்துகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அச்சு எந்திரங்களும் துணையாக இருந்தன. உரை நடையும் உரைநடை இலக்கியங்களும் உரைநடைச் செய்திகளும் தகவல் தொடர்பு சாதனங்களும் பிரச்சார சாதனங்களும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெருகின. பத்திரிகைகள் (செய்தித்தாள்கள்) கதைகள், கட்டுரைகள், நவீனங்கள், மற்றும் பலவகை உரைநடை இலக்கியங்கள் பெருகின. அவைகள் மூலம் மொழிகளின் உரைநடை விரிவுபட்டு அவை புதிய பரிமாணங்களை எட்டின. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய உரைநடை வளர்ச்சிக்கு, செய்தித் தாள்கள், உரைநடை நூல்கள், பாட நூல்கள், அரசியல் மற்றும் அறிவியல் சமூகவியல் நூல்கள் முதலியவற்றின் வளர்ச்சியும் விரிவாக்கமும் விநியோக முறைகளும் அடிப்படைக் காரணங்களாக அமைந்திருந்தன. அத்துடன் புதிய விசை சக்தி எந்திரங்களும் அச்சு எந்திரங்களும் நவீன முறையில் பேப்பர் உற்பத்தியும், நவீனப் போக்குவரத்து சாதனங்களும் ரயில்வே போக்குவரத்தும் உந்து சக்தியாக விளங்கியது. உற்பத்திமுறை அரசியல் சமூக செயல்பாடுகள், போக்குவரத்து வளர்ச்சி, விசை சக்தி வளர்ச்சி, நவீன எந்திரத் தொழில் வளர்ச்சி, கல்வி கலாச்சார வளர்ச்சி மற்றும், மனித