பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அ. சீனிவாசன் 51 5. இந்தியாவில் அன்னியர் ஆட்சி இந்திய நாட்டில் அன்னியர் ஆட்சி பரவியது. 18, 19-ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சி நிலை பெற்றது. 1757-ம் ஆண்டில் நடைபெற்ற பிளாசி யுத்தம் தொடங்கி 1857-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது சுதந்திரப் போராட்டப் பேரெழுச்சி வரை நூறாண்டு காலத்தில் ஆங்கிலேயர்கள் நடத்திய ஆக்கிர -மிப்புப் போர்கள், படுகொலைகள், கொள்ளைகள் மூலம் இந்த பாரத புண்ணிய பூமியைக் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் 1947-ம் ஆண்டு வரை ஆங்கில அரசின் நேரடி ஆட்சியை நடத்தினார்கள். அன்னிய ஆட்சியின் காரணமாக பாரத நாட்டின் பழம் பெரும் நாகரிகம் சேதமடைந்து சிதைவுற்றது. அன்னிய ஆட்சியின் கொள்ளை இந்திய நாட்டில் மிகப் பெரிய அளவில் சேதங்களையும் படு காயங்களையும் பதித்தன. நமது நாட்டின் பழைய உற்பத்தி முறை, நீர்ப்பாசனமுறை, சாகுபடி முறை, உலகப் புகழ் பெற்றிருந்த நெசவுத் தொழில், கைவினைத் தொழில்கள், துறைமுகங்கள், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், போக்குவரத்து எண்ணற்ற தொழில் நுட்பங்கள் படிப்படியாக பெரும் அளவில் சிதைந்து சேதப்பட்டன. நாட்டில் வேலையின்மையும், ஏழ்மையும், வறுமையும், பசி, பட்டினியும் பட்டினிச்சாவுகள், கல்லாமை, படிப்பறிவின்மையும் அதிகரித்தது. பழைய ஆட்சி முறைகள், அரசியல் மற்றும் நிர்வாக முறைகள் அழிந்து புதிய அன்னிய ஆங்கிலேயே ஆட்சி நிர்வாகம் ஏற்பட்டது. நீதி நிர்வாகம், வர்த்தகம், வாணிபம் ஆகிய பல துறைகளும் ஆங்கில மயமாக்கப்பட்டது. இந்திய நாட்டின் மொழிகள் கல்வி கலாச்சாரம், ஆலயங்கள் வழிபாடுகள், வாழ்க்கை முறைகள், இலக்கிய வளர்ச்சி, பயிற்சி, முதலிய அனைத்தும் தேக்கமடைந்தன, இன்னும் பின்னுக்குத் தள்ளப் பட்டன.