பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின்-உரைநடை-அ-சீனிவாசன் 59 வேண்டும். அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால் சென்ற சில நூற்றாண்டுகளாக புலவர்களும், சாமியார்களும் சேர்ந்து வெகு சாதாரண விஷயங்களை அசாதாரண அலெளகீக அந்தகார நடையில் எழுதுவது தான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.” இந்தப் பகுதியில் பாரதியின் நல்ல உரைநடை வடிவமும் அத்துடன் மொழிநடை பற்றிய அவருடைய கொள்கையின் உள்ளடக்கமும் அடங்கியுள்ளதைக் காணலாம். அத்துடன் பாரதியாரின் உரைநடையில் இலக்கண விதிவிலக்குகளையும் காண்கிறோம். பாரதியாரின் உரைநடையில் மொழி பெயர்ப்புகளும் ஒரு பகுதியாகும். “அடங்கி நட” என்னும் கட்டுரை வங்க பாஷையில் யூரீமான் சர்.ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப் பெற்று, "மாடர்ன் ரிவியூ” பத்திரிகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அதனின்றும் ரீமான் சி.சுப்பிரமணிய பாரதியால் மொழி பெயர்க்கப்பட்டது. “மழை கொஞ்சம் தூற ஆரம்பித்தால் எங்கள் சந்திலும் அது போய்ச் சேரும். சித்பூர் ரஸ்தாவிலும் நீர் வெள்ளமாய் விடுகிறது. நான் தலை நரைத்த கிழவனாகி விட்டேன். சிறுபிராயம் முதல் இதுவரை ஒரு முறை கூட தவறாமல் வருஷந்தோறும் இப்படி நடப்பதைப் பார்க்கும் போது இவ்வுலக வாழ்க்கையில் நீரில் பாதி நிலத்தில் பாதி குடியிருக்கும் ஜந்துக்களுக்குள்ள யோக்கியதை தான் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி உதிப்பது உண்டு.