பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் பாரதியின் உரைநடை-அ-சீனிவாசன் 93 -களுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிட மிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடைய கடமை. பிறகு நல்ல போஷணை கிடைக்கும்” என்று எழுதியுள்ளார். இன்னும் “வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளின் பழம் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் சொல்லுதல் நியாயாமில்லை. அதனால் நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும் படி நேரிடும்” என்று குறிப்பிடுகிறார். "சங்கீதத்திற்கு சாதகம் அவசியம் என்பதைக் குறித்து நம்மவர் தொண்டையை நேரே பழகுவதில்லை. காட்டு வெளிகளிலே போய் கர்ஜனை செய்ய வேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும். சாஸ்திரப்படி அகார சாதனம் செய்யும் பழக்கம் தென்னாட்டில் குறைவு பட்டிருக்கிறது. “தவிரவும் உள்ளத்திலே வீரம் இருக்க வேண்டும். உள்ளத்திலே சத்து இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றிப் பேச வேண்டியது இல்லை. உள்ளத்தில் தைரியம் சந்தோஷம், வலிமை முதலிய கபலகூடிணங்கள், தமிழைக் காட்டிலும் வடநாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகிறது. முன்னெல்லாம் தமிழ் நாட்டிலேதான் இந்த குணங்கள் மிகவும் விசேஷமாக விளங்கின. இப்போது சில வருஷங்களாகக் குறைவு பட்டிருக்கின்றன. இந்தக் குணங்களை நமது ஜனங்கள் எல்லோருமே பயிற்சி செய்து கொள்ள வேண்டும். சங்கீத வித்வான்கள் இவற்றைப்