பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32



(3) பிங்கல நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுளில்

“பிங்கல முனிவன் எனத்தன் பெயர்நிறீஇ உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை”

என உரிச்சொல் என்றே கூறப்பட்டுள்ளது.

(4) கயாதரர் எழுதிய கயாதரம் என்னும் நூலின் பாயிரப் பாடல்களில்,

“............... தேவைக் கெயாதரன் தொல் வேதியன் சொற்ற உரிச்சொற் பனுவலு மேம்படுமே.”

“............... உரிச்சொல் கிளர் பனுவல்....................... நடக்கும் படியாக் கெயாதரம் என்றுபேர் நாட்டினனே.”

எனவும், கயாதர நூலின் இறுதிப் பாடலில்,

“விரும்பிய கோவை உரிச்சொற் பனுவல் விரித்துரைத்தான் பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவைப் பெருந்தகையே.”

எனவும் ‘உரிச்சொல் பனுவல்’ என்றே கூறப்பட்டுள்ளது.

(5) திவாகரர், பிங்கலர், கயாதரர் முதலிய அறிஞர்களைப் போலவே காங்கேயன் என்னும் புலவரும் சொற்பொருள் கூறும் நூல் ஒன்று இயற்றியுள்ளார். அவர் தமது நூலுக்கு ‘உரிச்சொல்’ என்றே பெயர் வைத்துவிட்டார். இதனை,

“உத்தம சீலத்துக் காங்கேயன் சொன்ன உரிச்சொல்தன்னை.........”

என்னும் பாடற் பகுதியால் அறியலாம். மற்றும், இந்த உரிச்சொல் நிகண்டின் ஓலைச் சுவடியொன்றின்