பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423

423

இவ்வகராதி துணை செய்யும். வேறு பெரிய பொது அகராதியைக் கொண்டும் தெரிந்து கொள்ளலாம்; ஆனால் அதில் பல பக்கங்களைப் புரட்டவேண்டும்; இதிலோ உடனடியாக எடுத்துவிடலாம். இஃது ஒரு. வகைப் புது முயற்சியே.

இதன் ஆசிரியர் புதுவை சுந்தர சண்முகனார். இது 1948- இல் எழுதி முடிக்கப்பட்டு, பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

இலக்கண அகராதி இலக்கண நூற்களிலுள்ள இலக்கணக் கலைச் சொற்கள் அகர வரிசைப்படுத்தப்பட்டு, சிறு சிறு . கட்டுரை போல் விரிவாக விளக்கஞ் செய்யப்பட்டுள்ள இவ்வகராதியின் ஆசிரியர் புதுவை சுந்தர சண்முகனார். இது 1948 - இல் எழுதப்பட்டது, அவ்வாண்டிலேயே சுந்தர சண்முகனாரால் எழுதப்பட்டு, புதுவைப் பைந் தமிழ்ப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட தமிழ்த் திருநாள், குழந்தைப் பாட்டு, ஆத்திசூடி அமிழ்தம், சிறுவர் செய்யுட் சோலை ஆகிய நூற்களின் இறுதி மேலட்டைப் பக்கத்தில் இலக்கண அகராதி - விரை வில் வெளிவரும் - என்று விளம்பரப்படுத்தப்பட்டும், இதுவரை இது வெளியாகும் சூழ்நிலை ஏற்படவே, யில்லை .

கார்த்திகேயினி புதுமுறை அகராதி புதுக்கோட்டை - இராமச்சந்திரபுரம் - கார்த்திகே. யினி பிரசுரத்தாரால் 1949-இல் வெளியிடப்பட்ட இப். புதுமுறை அகராதியின் தொகுப்பாசிரியர், முன்னாள் 'தாய்நாடு' ஆசிரியராகிய எஸ். நடராசன் என்பவர்.