பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

440

சமசுகிருதம் - தமிழ் அகராதி சம்சுகிருத எழுத்தால் எழுதப்பட்ட சம்சுகிருதச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல்லால் பொருள் கூறும் அகராதியிது. தொகுத்தவர் : பாபநாசம் - சிவன் அவர்கள். ஆண்டு : 1962.

பல்பொருள் ஆங்கிலத் தமிழ் வரிசை பல்துறைப் பொருள் பற்றிய ஆங்கிலச் சொற் கட்குத் தமிழ்ச் சொற்களால் பொருள் கூறுவது இது. தொகுப்பாசிரியர்கள் : மு. சதாசிவம், சி. சிவராமலிங்கம் ஆகிய அறிஞர் இருவர். வெளியீடு: சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். ஆண்டு 1962.

நாலாயிரத் திவ்யப் பிரபந்த அகராதி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் தொகுப் பாகிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலுள்ள இன்றி யமையாச் சொற்கள் அகரவரிசையில் பொருள் கூறப் பட்டிருப்பது இவ்வகராதி. 'அஃகம்' என்பது முதல் 'வையம்' என்பது ஈறாகப் பல சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் தொகுப்பாசிரியர் : சீரங்கம் தேவதானப் பத்திரிகை ஆசிரியராகிய பார்த்தசாரதி ஐயங்கார். ஆண்டு : 1963.

திவ்யப் பிரபந்த அகராதி இந்தப் பெயரில் சிறிய அளவிலும் ஓர் அகராதி உள்ளது.

ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம் -

English - Tamil - Dictionary. தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச்சொல்லாலும் பொருள் கூறும் 'தமிழ் லெக்சிகன்'