பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58

இனி, மரபியலின் மாதிரிக்காகச் சில மரபுச் சொற்களைக் காண்போம்:- பறவை - விலங்குகளின் இளமை நிலையைக் குறிக்கும் பெயர்கள் முதல் நூற் பாவில் கூறப்பட்டுள்ளன. அப் பா வருமாறு:

"மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற் பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே."

இவற்றுள்ளும், பார்ப்பு, பிள்ளை என்னும் இரு பெயர்களும் பறவை, ஊர்வன என்னும் இரண்டு இனங்களின் இளமை நிலையைக் குறிக்கும் பெயர்களாம். "அவற்றுள், பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை." “தவழ்பவை தாமும் அவற்றோர் அன்ன.” என்பன நூற்பாக்கள், மூங்கா (கீரி), வெருகு (பூனை), எலி, அணில் இந்நான்கிற்கும் குட்டி, பறழ் என்னும் இளமைப் பெயர்கள் உரியனவாம்: 'மூங்கா வெருகுஎலி மூவரி அணிலொடு ஆங்கவை நான்கும் குட்டிக்கு உரிய.' 'பறழ் எனப்படினும் உறழாண் டில்லை.' என்பன நூற்பாக்கள். காய், பன்றி, புலி, முயல், கரி ஆகியவற்றிற்குக் குருளை, குட்டி, பறழ் என்னும் இளமைப் பெயர்கள் உரியனவாம். இவற்றுள் நாய் தவிர மற்றவற்றிற்குப் பிள்ளை என்னும் இளமைப் பெயரும் உரியதாம்: