பக்கம்:தமிழ் அங்காடி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  117


அரசைக் கைப்பற்றியதாகவும் வரலாறு கூறுகிறது. குமணனது அரசை அவன் தம்பி பற்றவில்லையா? இந்தப் பட்டியல் மிகவும் நீளும். ஈண்டு,

"உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உ
டன் பிறந்தே கொல்லும் வியாதி" (மூதுரை-20)

“மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ்"
(நல்வழி-24)

என்னும் ஒளவையின் அமிழ்தமொழிகளும், அம்பிகாபதி காதல் காப்பியம் என்னும் நூலில் உள்ள

"ஒருமகன் ஈட்டி உள்ள
உயர்பொரு ளதனில் பங்கு
தெருமகன் கேட்பான் பற்றான்
திருடனைத் தவிர, தாயார்
தருமகன் மட்டும் பங்கு
தாஎனத் தருவான் தொல்லை
ஒருவயிற் றுப்பி றந்த
உறவுஅவன் காட்டும் கத்தி"

என்னும் பாடலும் ஈண்டு எண்ணத் தக்கன.

இவ்வாறு சில பொருத்தமான சூழ்வுரைகளைக் கூறி வீடணனை ஏற்றுக் கொள்ளலாம் என அனுமன் இராமனிடம் தனது கருத்தை வெளியிட்டான்.

வீக-வாழ்க

அனுமன் கூறியதையே இராமன் ஏற்று வீடணனுக்குப் புகலிடம் அளிக்க எண்ணிக் கூறுகிறான்:

என்னை அடைக்கலமாக அடைந்தவனை ஏற்றுக் கொள்வதால், வெற்றி கிடைப்பினும் தோற்பினும் அழியினும் அழியாது வாழ்வதாயினும் எப்படியாயினும் கைவிடாமல் ஏற்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/119&oldid=1203497" இலிருந்து மீள்விக்கப்பட்டது