பக்கம்:தமிழ் அங்காடி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128  தமிழ் அங்காடி


வரங்களை யெல்லாம் கொடுத்து விடுவதும், பின் அரக்கர்கள் தேவர்களைத் துன்புறுத்துவதும், பெருங் கடவுளர் அரக்கரை அழிப்பதும் வழக்கமான வாடிக்கைக் கதை. இரணியன் கதையும் இன்னதே. இரணியனுக்கு நாராயணனைப் பிடிக்காது. தேவர்கட்கும் தொல்லை கொடுத்து வந்தான்.

பிரகலாதன்

இரணியனுக்குப் பிரகலாதன் என்னும் அரிய மகன் இருந்தான். அப்பிரகலாதன், அறிஞர்கட்குள் பெரிய அறிஞன், தூயவர்களுக்குள் மிக்க தூயன், மறைகளினும் தூயவன், ஒப்பற்ற மெய்யறிவினன், அறத்தின் தலைவன், உயிர்களிடத்தில் தாயினும் அன்புடையவன், ஒப்பற்ற தகுதியாளன்.

"ஆயவன் தனக்கு அருமகன் அறிஞரின் அறிஞன்
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயன்
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன்
தாயின் மன்னுயிர்க்குஅன்பினன் உளன் ஒருதக்கோன்”

பின்னால் பிரகலாதன் தந்தையினும் மாறுபட்ட நிலை யுடையவனாய் ஒழுகினான் என்பதற்கு இந்தப் பாடலிலேயே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எப்படியெனில், இந்த நல்ல பண்புகட்கெல்லாம் எதிர்மாறானவன் இரணியன் என்பதால் என்க.

கல்வி புகட்டல்

இரணியன் ஓர் அந்தணனை அமர்த்தி, பிரகலாதனுக்குக் கல்வி புகட்டுமாறு பணித்தான். தொடக்கத்தில் "நமோ இரணியாய” என்று கூறுதல் வழக்கம். ஆசான் அவ்வாறு கூறும்படிச் சொல்ல, பிரகலாதன் அவ்வாறு கூறாமல் 'ஓம் நமோ நாராயணாய' என்று கூறினான். உடனே ஆசான் வருந்தி, ஏ. பாவி பிரகலாதா! என்னையும் உன்னையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/130&oldid=1204179" இலிருந்து மீள்விக்கப்பட்டது