பக்கம்:தமிழ் அங்காடி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134  தமிழ் அங்காடி



‘ஈரேழு பதினாலு உலகம்’ என்பது மக்கள் வழக்காற்றிலும் உண்டு. அயிர்ப்புஇல் ஆற்றல் = ஐயத்திற்கு இடம் இல்லாத வலிமை. அனுசன் = தம்பி. அனுஜன் என்பது அனுசன் எனப்பட்டது. 'அனு’ என்பது 'பின்’ என்பதையும் ‘ஜ’ என்பது பிறத்தலையும் குறிக்கும். அனு சன் = பின் பிறந்தவன் - அதாவது - தம்பி இராமானுஜன் என்பது இராமனுடைய தம்பியாகிய இலக்குவனைக் குறிப்பது காண்க.

இங்கே தம்பி என்பது இரணியனுடைய தம்பியாகிய இரணியாட்சனைக் குறிக்கும். இரணியம் = பொன்; அட்சம் = கண் = பொன் கண் உடையவன் என்பது பொருள். ஏனம் = பன்றி. எயிறு = பல். பயிற்றல் = அடிக்கடி கூறுதல், பயத்தல் = பிள்ளையாகப் பெறுதல்.

இரணியாட்சன் நிலத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் விட்டான். திருமால் பன்றி உரு (வராகவதாரம்) எடுத்துப் பற்களால் அவனைக் கிழித்துக் கொன்று நிலத்தை மீட்டார் என்பது புராணக்கதை.

இவ்வாறு என் தம்பியைக் (உன் சிற்றப்பாவைக்) கொன்றவனது பெயரையா பயிற்றுவது? அதற்காகவா உன்னைப் பெற்றேன்? பயிற்றல் (பயிற்சி) என்பது திரும்பத் திரும்பச் செய்தல். பயம் என்றால் பயன். பயத்தல் என்றால் = பயன் உண்டாகச் செய்தல். இந்தச் செய்தி ‘இரணியன் வதைப் பரணி என்னும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"ஏனம்ஒன்றென எழுந்து வந்து எம் ஐயன்
ஆவி உண்டவனை இன்றுநீ
மான மின்றி எதிரோதவோஉனை
வளர்த்தது என்றிவை கிளர்த்தியே” (335)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/136&oldid=1204191" இலிருந்து மீள்விக்கப்பட்டது