பக்கம்:தமிழ் அங்காடி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138  தமிழ் அங்காடி


“இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி” (10:20-23)

என்பது பாடல் பகுதி. மற்றும், சிவப்பிரகாச அடிகளாரின் பிரபுலிங்க லீலை நூலில் ஒரு பெரிய அடி வணக்கம் கற்பனையாகக் கூறப்பட்டுள்ளது .அதாவது:-

சிவன் உமையின் ஊடலைத் தணிக்க உமையின் காலில் விழுந்தாராம். அவரது முடியில் பிறைநிலவு, பாம்பு, கங்கா தேவி உண்டு. உமையின் நெற்றிப் பகையாகிய பிறை நிலவும், அல்குல் பகையாகிய பாம்பும் தன் காலில்படும்படி விழுந்ததற்கு மகிழாமல், சககளத்தி (ஒத்த மனைவி) யாகிய கங்காதேவி தன் காலில் படும்படி விழுந்ததற்காக உமாதேவி மகிழ்ந்தாளாம். பாடல்:

"ஆதி பகவன் தனது ஊடல்
தணிப்பான் பணிய அவ்விறைவன்
பாதம் இறைஞ்சு மதற்கும் நெற்றிப்
பகையும் அல்குல் பகையுமாம்
சீத மதியும் அரவும் விழும்
செயற்கும் உவகை கொளாமல் அலை
மாது பணியு மதற்கு மனமகிழும் .
உமையை வணங்குவாம்" (துதிகதி: 2)

என்பது பாடல். மேலும், கம்பராமாயணத்திலேயே மாரீசன் வதைப் படலத்தில் இத்தகைய செய்தி ஒன்றுள்ளது:-மாதர் ஊடல் கொண்டபோதும் இராவணனின் மகுடம் சூடிய தலைகள் வணங்கிய தில்லையாம்.

"மெலியும் இடை தடிக்கும் முலை வேயிளங் தோள்
சேயரிக் கண்கள் வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
மகுடகிரை வயங்க மன்னோ” (4)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/140&oldid=1204201" இலிருந்து மீள்விக்கப்பட்டது