பக்கம்:தமிழ் அங்காடி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  179



“அப்படியா சங்கதி! அப்படியென்றால் இப்போது வீட்டில் இருக்கும் பர்வதம் அம்மாள் கமலநாதனுக்கு இரண்டாம் தாரமா?”

“ஆமாம் ஆமாம். மீனா போன பிறகு இந்தச் சனியனைத்தான் அவனுக்குக் கட்டி வைத்தேன்”.

"ஒகோ வீட்டில் இருக்கும் குழந்தைகள் சேகரும் கமலாவும் கமலநாதனுக்கு இரண்டாந்தாரத்து மக்களா? அப்படி சொல்லு”.

"நீ ஒண்ணு. கமலநாதனுக்கு இருப்பது ஒரே பிள்ளைதானையா”.

"அப்படியென்றால் சேகரும் கமலாவும்...?"

"சேகர் பர்வதத்தின் அண்ணன் மகன். கமலா அந்தப் பிசாசினுடைய அக்கா மகள். கல்யாணமாகி ஐந்தாறு ஆண்டாகியும் தனக்குப் பிள்ளை பிறக்காததால் பர்வதம் சேகரையும் கமலாவையும் சிகாரத்துக்குக் கொண்டுவந்து வளர்க்கிறாள்"

"நன்றாயிருக்கிறது நியாயம்! சரி, நீயும் மணியனும் வெளிக்கிளம்புவானேன்?”

“அதுவா? என்னையும் மணியனையும் எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று பர்வதம் கங்கணம் கட்டிக் கொண்டாள். அதற்காக ஏதாவது ஏடாகூடம் செய்து கொண்டே யிருந்தாள். சாப்பிடுவதற்கு எங்களுக்குத் தட்டு கழுவி வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள் நாங்களாகத் தட்டு கழுவிக் கொண்டுபோய் உட்காருவோம். சாப்பிட்ட பின்பும் நாங்களாகத் தட்டைக் கழுவி வைத்து விடுவோம். அப்புறம் எங்களுக்குப் பரிமாற முடியாது என்று மறுத்து விட்டாள். நாங்களாக எடுத்துப் போட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/181&oldid=1204296" இலிருந்து மீள்விக்கப்பட்டது