பக்கம்:தமிழ் அங்காடி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  187


மெடியட், பி.ஏ., எம்.ஏ. தேர்வுகட்குப் படிக்க முடிந்தது. இஃதும் சிவத்தால் பெற்ற சிறப்புக் கொடையாகும்.

அடுத்து ஒரு நிகழ்ச்சி கூறுவேன்: - ஒரு முறை வானூரில் சொற்பொழிவாற்ற, அவ்வூர் இலக்கிய அன்பர்கள் புதுவைச் சிவத்தின் உதவியை நாடினர். சிவம் வழக்கம்போல் என்னையும் அழைக்கச் செய்தார். யானும் சிவமும் சொற்பொழிவுக்கு வருவதற்கான உறுதி பெற்றவுடன் வானூரினர் சென்றுவிட்டனர்.

சொற்பொழிவு நாளன்று பிற்பகல் இரண்டு (2-00) மணிக்கே வானுரார் ஒருவர் வந்து எங்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். மூன்று (3-00) மணியளவில் வானூர்ப் பேருந்துப் பாதையில் இறங்கினோம், மூன்று மணிக்கே, அங்கே உள்ள ஒரு தேநீர்க் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்தார். அவ்வளவுதான். அதன் பிறகு சிற்றுண்டியோ தேநீரோ கடைசி வரையும் கிடையாது.

ஊரில் மக்கள் வயல் வேலைக்குச் சென்று இரவு ஏழு மணிக்குத்தான் திரும்புவார்கள் - அதனால் கூட்டத்தை இரவு எட்டு மணிக்குத்தான் தொடங்க வேண்டும் என எங்கட்கு அறிவிக்கப்பட்டது. மாலை ஆறு மணி ஆகியும் சிற்றுண்டி தரப்படவில்லை. நாங்கள் இருவருமே மாலையில் சிற்றுண்டி அருந்துபவர்கள். இது குறித்து இருவரும் எங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டோம். எங்கட்குத் தங்க ஓர் இடம் விடப்பட்டிருந்தது. யானோ, மாலையில் சிற்றுண்டி அருந்தினாலும், இரவு 7-30 மணிக்கெல்லாம் உணவு கொள்பவன். எனவே பசியோடு எட்டு மணிக்கு எவ்வாறு சொற்பொழிவாற்ற முடியும்?

இந்த நிலையில், சிவம், "நான் பேருந்துப் பாதையில் உள்ள சிற்றுண்டிக் கடைக்குக் கடைக்குச் சென்று சிற்றுண்டி அருந்திவிட்டு உங்களுக்கும் வாங்கி வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/189&oldid=1204321" இலிருந்து மீள்விக்கப்பட்டது