பக்கம்:தமிழ் அங்காடி.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


190 தமிழ் அங்காடி

புதுவையில் கல்விக் கழகம் மிகவும் சிறப்பாகச் செயலாற்றிய காலம் அது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வ.சுப. அவர்களும் மயிலம் தமிழ்க் கல்லூரியி லிருந்து யானும் சொற்பொழிவாற்ற வந்திருந்தோம். சொற்பொழிவு இரவு பத்து மணிக்கு முடிந்ததால் அன்றிரவு கல்விக் கழகத்திலேயே தங்கினோம். இருவருமே தமிழ் தொடர்பான நிறுவனங்களிலிருந்து வந்ததால் தமிழ் வளர்ச்சி பற்றியும் பாடத்திட்டம் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

அந்தக் காலத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடத்தின் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் அண்மையில் சில திங்கள்கட்கு முன்புதான் (தைப்பூசத்தில்) இறுதி எய்தினார்.

ஞானியார் அடிகளாரிடம் பெரும் பற்றும் பணிவும் கொண்டிருந்த வ.சுப. அவர்கள், நாளை காலை திருப்பாதிரி புலியூர் சென்று ஞானியார் மடத்தையும் ஞானியாரின் அடக்கத்தையும் (சமாதியையும்) காண வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள். ஞானியாரின் மாணாக்கனாகிய யான் அவரை அழைத்துக் கொண்டு போவதாகத் தெரிவித்தேன்.

ஒரு தோற்றம் இருபத்தைந்து அகவையுண்ட வ.சுப. ஞானியாரின் சமாதியைப் பார்க்க விரும்பினார் என்றால் ஞானியார் அடிகளார் வணங்குதற்கு உரிய மிக்க பெருமை உடையவர் என்பது பெறப்படும். அந்தக் காலத்தில் பெரிய தமிழ் அறிஞர்களெல்லாம் ஞானியாரின் திருவடிகளில் விழுந்து வணங்குவர். அடிகளாரின் அளவிட முடியாத சிறப்புக்கு ஒரு சான்று காண்பாம்:

எவர் காலிலும் விழுந்து வணங்காத திரு. வி. கல்யாண சுந்தரனாரும் அடிகளாரின் திருவடிகளில் விழுந்து