பக்கம்:தமிழ் அங்காடி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194  தமிழ் அங்காடி


அவ்வூர்க் கோயிலில் வழிபாடு செய்தபின், ஒரு குதிரை வண்டி அமர்த்தி வண்டிப் பாளையம் - சமாதித் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றேன். அடிகளாரின் அடக்கத்தின் முன்னே மாணிக்கம் ஐயா, கீழே விழுந்து வணங்கி எழுந்து தரையில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி அமைதி காத்தார். பின்னர் உணவு முடித்துச் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தேன்.

யான் மாணிக்க ஐயாவின் தலைமையில், 1971 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 'தொண்ணுறும் தொள்ளாயிரமும்' என்னும் பொருள் பற்றியும், 1973 ஆம் ஆண்டு சென்னைக் கருத்தரங்கில் 'அளபெடைகளின் பொருள் பெறுமானம்’ என்னும் பொருள் பற்றியும், அதே 73-இல் ஞானயார் அடிகளாரின் நூற்றாண்டு விழாவில்-வண்டிப் பாளையம் சமாதித் தோட்டத்தில் அடிகளாரின் அருள் பணி பற்றியும் சொற்பொழிவாற்றினேன். அந்தக் கூட்டத்தில் ஐயா எனது நூல் ஒன்றையும் வெளியிட்டார். மூளைக் கட்டிப் பிணியாளனாகிய யான் அமர்ந்து பேசவும் ஒப்புதல் அளித்தார்.

அண்ணாமலையில் ஐயா பணியாற்றிக்கொண்டிருந்த போது இடையில் அதை விட்டுக் காரைக்குடிக்குச் சென்று அழகப்பா கலைக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார். மீண்டும் அங்கிருந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வந்து அனைத்துத் தமிழ்த் துறைக்கும் இந்திய மொழிப் புலத்திற்கும் தலைமை ஏற்று அரும்பணிபுரிந்தார். ஐந்தாவது வகுப்பு வரையும் உள்ள தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் சிலர் வகுப்பு எடுக்காதது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பேற்றிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/196&oldid=1204337" இலிருந்து மீள்விக்கப்பட்டது