பக்கம்:தமிழ் அங்காடி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226  தமிழ் அங்காடி



மா: தெரிந்து கொண்டேன் ஐயா. - ஒவ்வொரு பாவிலும் பல வகை உண்டா ஐயா.

ஆ: ஒ, உண்டே! வெண்பா, குறள் வெண்பா - நேரிசை வெண்பா - இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - நேரிசைச் சிந்தியல் வெண்பா - இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப் பல வகைப்படும். குறள் வெண்பாவில் வெண் செந்துறை, குறள் தாழிசை என இரு பிரிவு உண்டு.

அடுத்தது: ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா, இணைக் குறள் ஆசிரியப்பா, நிலை மண்டில ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா என நால்வகைப்படும்.

கலிப்பாவோ, ரிேசை ஒத்தாழிசைக் கலிப்பா - அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா - வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கலி வெண்பா - தரவு கொச்சகக் கலிப்பா - தரவினைக் கொச்சகக் கலிப்பா - சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா - பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா - மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப் பல வகைப்படும்.

அடுத்து - வஞ்சிப்பா, குறளடி வஞ்சிப்பா - சிந்தடி வஞ்சிப்பா என்னும் வகை உடையதாகும்.

இந்த நால்வகைப் பாக்களுக்கும் தாழிசை - துறை - விருத்தம் - என்னும் இனங்கள் உண்டு. இவை 'பாவினம்’ எனப்படும்.

மா: பண்டைக்கால இலக்கிய - இலக்கண நூல்களில் இந்தப் பாக்களைப் பற்றிய செய்திகள் நிரம்பக் கூறப்பட்டுள்ளனவா ஐயா?

ஆ: சொல்கிறேன்: தொன்மைக் காலமாகிய சங்க காலத்தில் ஆசிரியப்பாவும் வெண்பாவுமே முதன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/228&oldid=1204397" இலிருந்து மீள்விக்கப்பட்டது