பக்கம்:தமிழ் அங்காடி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  277




அங்காடிப் பகுதி

23. தமிழ் அங்காடி

அங்காடி என்பது கடை - கடைத் தெருப் பகுதியைக் குறிக்கும் - அதாவது, வாணிகம் நடைபெறும் இடம் அங்காடியாகும்.

“வகைதெரி வறியா வளம்தலை மயங்கிய
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்’
(14:178, 179)

‘சிங்கா வண் புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வணிகன்’ (23:149-151)

என்பன சிலப்பதிகாரப் பாடல் பகுதிகளாகும்.

தமிழ்நாட்டில் பகலிலேயன்றி இரவிலும் அங்காடியில் வாணிகம் நடைபெற்றதாம். இரவில் வாணிகம் நடைபெறும் இடம் அல்லங்காடி எனவும், பகலில் வாணிகம் நடைபெறும் இடம் நாளங்காடி எனவும் பெயர் வழங்கப்பெற்றன. இது தொடர்பான சில இலக்கிய அகச்சான்றுகளைக் காண்பாம்:

"பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே
அல்லங்காடி அழிதரு கம்பலை" (543-44)

இது மதுரைக் காஞ்சிப் பகுதி. அகநானூற்றில்,

"வாடா வேம்பின் வழுதி கூடல்
நாளங்காடி நாறும் நறுநுதல்" (98; 9, 10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/279&oldid=1210514" இலிருந்து மீள்விக்கப்பட்டது