பக்கம்:தமிழ் அங்காடி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  27


இவர் 'மலிவா' என்னும் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். இருவரும் இன்பமுடன் இல்லறம் நடத்தினர். பின் இல்லறம் இல்லாத அறமாகியது. கருத்து வேற்றுமை காரணமாக மணமுறிவு (விவாக ரத்து) ஏற்பட்டது. பிறகு கைம் பெண்ணான (விதவை) எல்சா, என்னும் பெண்ணை மணந்து கொண்டார். நம் நாட்டிற் முற்றிலும் மாறான முறை இது. இது சீர்திருத்தம் என்னும் பட்டுப் போர்வை போர்த்திக் கொண்டுள்ளது.

இவர் முதல் மனைவியை விட்டுப் பிரிந்தாலும் அவளிடத்தில் கொண்டிருந்த உணர்வு குறையவில்லை. தனக்குக் கிடைத்த 40,000 (நாற்பதாயிரம்) டாலர் பணத்தில் பாதியை முதல் மனைவிக்கு ஈந்து, மற்ற பாதியை அறச் செயல்கட்கு அளித்து விட்டார். இதனால் இவரது உயர்ந்த உள்ளம் புலனாகலாம்.

ஐன்ஸ்டீன் யூதர் மதக் குடும்பத்தில் பிறந்தவர். செர்மனியை ஆண்ட இட்லருக்கு யூதர்களைப் பிடிக்காமையால் பலர் கொல்லப்பட்டனர் - பலர் வெளியேற்றப் பட்டனர். வெளியேறியவர்களுள் ஐன்ஸ்டீன் குடும்பமும் அடங்கும்.

பண்புகள்

ஐன்ஸ்டீனின் பண்புகள் மிகவும் சிறந்தவை-உயரியவை. அவர் அமைதியே வடிவானவர். எந்தச் சூழ்நிலையிலும் . உணர்ச்சி வயப்படும்படியான நிகழ்ச்சி நேர்ந்த போதும் அமைதியாகவே இருப்பார்.

எளிமையான தோற்றம் உடையவர்; உடையும், ஒப்பனையும் (அலங்காரமும்) மிகவும் எளிமையா யிருக்கும் எளிமையான நடைமுறை வாழ்க்கையினையே பின் பற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/29&oldid=1203100" இலிருந்து மீள்விக்கப்பட்டது