பக்கம்:தமிழ் அங்காடி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  47


கொண்டு, மருண்ட மான்போல் சிறிது நாணி ஒதுங்கி நின்று நல்லவள்போல் நடித்தாள்:

        "அவ்வயின் அவ்வாசை தன்அகத்து
            உடைய அனனாள
        செவ்விய முக்ம் முன்னிஅடி
            செங்கையின் இறைஞ்சா
        வெவ்விய நெடுங்கண் அயில்
            வீசி அயல்பாரா
        நவ்வியின் ஒதுங்கி யிறைநாணி
            அயல் கின்றாள்" (37)

அயில் = வேல், நவ்வி = மான். நெடுங்கண் அயில் வீசினாள் என்பதில்தான் காமப்பார்வை அடங்கியுள்ளது. ‘வீசி' என்பது பார்வையின் விரைவையும் ஆழத்தையும் தீமையையும் அறிவிக்கிறது.

இராமனது வரவேற்பு

வந்தவளை இராமன் நோக்கி, உன் வரவு தீமையில்லாத வரவு ஆகுக. செம்மைப் பண்பு உடைய திருவே! நீ இங்கே வந்தது எங்களது நல்வினையின் பயனேயாகும். உன் ஊர் எது? பேர் எது? உன் உறவினர் யாவர் என வினவினான்.

        “தீதில் வரவாக திரு நின்வரவு சேயோய்
        போதஉளது எம்முழையோர் புண்ணியமது அன்றோ
        ஏதுபதி ஏதுபெயர் யாவர் உறவு என்றான்
        வேதமுதல் பேதைஅவள் தன்நிலை விரிப்பாள்” (38)

வேதமுதல் = இராமன். பேதை = சூர்ப்பணகை. உலகில் வரவேற்கும்போது 'நல்வரவாகுக' என்று கூறுவது வழக்கம். இங்கே, அதற்கு எதிர்மாறாக, 'தீமை இல்லாத வரவு ஆகுக’ என்றான். 'ஏனெனில், இவள் தீய நோக்குடன் வந்திருப்பதை முன்கூட்டி அறிந்துள்ளமையால் - என்க.

பின்னால் உள்ளதற்கு ஏற்ப முன்னால் செய்திகளை இவ்வாறு அமைப்பது கம்பருக்குக் கைவந்த கலை, கேகய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/49&oldid=1202397" இலிருந்து மீள்விக்கப்பட்டது