பக்கம்:தமிழ் அங்காடி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72  தமிழ் அங்காடி


             அளித்ததென்று உளம் மயங்கி
                 அரும்பிடி ஒரு கூர்ங்கோட்டுக்
             களிற்றினை முனிந்து செல்லும்
                 கம்பலை உடைத்து அக்குன்றம்” (19:23)

மேற்கூறிய இரண்டு செய்திகளில், வேறொரு பெண் கிளியோடு ஆண்கிளியும், வேறொரு பெண் யானையோடு ஆண்யானையும் உறவு கொண்டதற்காக - அதாவது ஒரே இனத்திற்குள் உறவு கொண்டதற்காக ஊடல் நிகழ்ந்த தாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், கம்பர் பாடலில், வேறு இனமாகிய பெண் சங்கோடு ஆண் தவளை உறவு கொண்டதற்காக ஊடல் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேறு இனத்தோடு உறவு கொள்ளும் செய்தி ஒன்று புற நானூற்றில் புனைந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, நத்தையும் சங்கும் உறவு கொண்டதாம். பாடல் இதோ:

                "கதிர்க் கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
                நாகிள வளையொடு பகல் மணம் புகூஉம்
                நீர்திகழ் கழனி” (266; 4,5,6)

இங்கே நாட்டைப் பற்றிச் சொல்லியிருப்பதில் ஒரு கருத்து உண்டு. பெண் சங்கை ஆண் தவளை விரும்பியதாகப் பெண் தவளை ஊடல் கொள்ளுவது என்பது ஒர் உவமையாகும். அதாவது, அரக்கியின் பார்வையில், சீதை பெண் சங்கு - இராமன் ஆண் தவளை - அரக்கி பெண் தவளையாம். பெண்தவளை தன் மாற்றாளாகிய பெண் சங்கை வெறுப்பதைப் போல், தான் (அரக்கி) மாற்றாளைக் (சீதையைக்) கண்டு உள்ளம் கொதிக்கிறாளாம். (சீதையும் அரக்கியும் வெவ்வேறு இனம்).

இவ்வாறு, உள்ளே ஓர் உவமம் உறைந்துள்ள அமைப்புக்கு 'உள்ளுறை உவமம்' என அணியியலார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/74&oldid=1202290" இலிருந்து மீள்விக்கப்பட்டது