பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3蒙 யும் குறிப்பதாகும். கரம் என்றும் சம்ஸ்கிருத பதத்திலிருந்து வந்த தாயின், கரத்தையுடையது கரி, யானை என்று அர்த்தத்தைத் தரும்: கருப்பு கருமை, எனும் தமிழ் மொழியினின்றும் வந்ததாயின் மேற் சொன்ன இரண்டாவது அர்த்தத்தைக் கொடுப்பதாகும். உடு என் னும் பதம் தமிழ் நூலிலிருந்து வந்ததாயின் உடு என்றும் வினைச் சொல் லாம் (உடையை உடு=தரி) சம்ஸ்கிருத பதமாயின் நட்சத்திரம் எனப் பொருள்படும். அத்தி என்பது ஹஸ்தி எனும் சம்ஸ்கிருத பதத் திலிருந்து வந்ததாயின் யானை என்று பொருள்படும்; ஹஸ்தத்தை யுடையது ஹஸ்தி=அத்தி, தமிழிலிருந்து வந்ததாயின் அத்தி எனும் ஓர் வகை மரத்தைக் குறிக்கும். (அத்தி மரம், அத்திக்காய்) குரு என்பதை தமிழ் மொழியாகக் கருதுவோமாயின் கொப்பளத்தைக் குறிக்கும்; சம்ஸ்கிருத பதமாகக் கருதுங்கால் , ஞானசிரியன், ஆசார் யன் என்று அர்த்தமாம். அராபிப்பதங்கள் ஆரியர்களுக்குப் பின் தென் இந்தியாவிற்கு வந்த அந்நிய நாட்டார்கள் அரேபியர் தேசத்து மனிதர்களாகிய அராபியராம். இவர்கள் மகம்மதியர்கள். இவர்கள் இந்தியாவின் மீது படை யெடுத்து ஜெயித்தவர்களன்று. வர்த்தகம் காரணமாக முக்கிய வர்த்தக விஷயமாக மலையாளப் பிரதேசத்திற்கு வந்தவர்கள். அந்நாட்டில் தற்காலம் மாப்பிள்ளைகள் என்று கூறப்பட்ட ஜாதி யார் பெரும்பாலும் ஆதிகாலத்தில் இங்கு வந்து சேர்ந்த அரா பியருக்கும் மலையாள ஸ்திரீகளுக்கும் பிறந்தவர்கள். அரா பியர் பூர்வ காலத்தில் கப்பல் யாத்திரை செய்வதில் மிகவும் நிபுணர்களாகி, பல தேசங்களுக்குப் போய் வியாபாரம் செய்துவம் தார்கள். அராபியர் தமிழ் நாட்டிற்கு வர்த்தகர்களாக வந்தபடியால், சாதாரணமாக வர்த்தகத்தில் உபயோகப்படும் அராபிக் பதங்கள் தமிழில் நுழைந்திருக்க வேண்டும் இதற்கு உதாரணமாக சில வார்த்தைகளைக் கூறுவோம். காப்பி, சாவுகார், வசூல், தாயத், அலாக்கு, அனுமத், இரீசால், தொஸ்தா, மாமுல் முதலியன. அவர்கள் மூலமாக மகம்மதிய மதம் முதலில் தென்இந்தியாவில் பரவ ஆரம் பித்தபடியாலும், பின்பு படையெடுத்து வந்த மகம்மதியர்களுடைய மதசம்பந்தமான பாலுை அராபி பாஷையானபடியாலும், தமிழில் மத சம்பந்தமான பதங்கள் சில நுழைந்திருக்கின்றன. உதாரணமாக :