離歌
அற்றுப்போன பழயகாலத்து ஆடைகளைக் குறிக்கும் மொழிகள் சிலப்பதிகாரத்தில், குச்சரி, சித்திரம், கம்பி, சில்லிகை, ஏடகம், பச்சிலை, பணிப்பொத்தி, பரியட்டக்காசு, புங்கர்க்காபுகம், பேடகம்
முதலிய ஆடைவகைகளின் பெயர்கள் உபயோகிக்கப்பட்டிருக் கின்றன.
அற்றுப்போன பழைய ஆபரணங்களைக் குறிக்கும் மொழிகள்
இங்ங்னமே ஆபரணங்களைக் குறிக்கும் மொழிகளைக் கருது மிடத்து, அநேகப் பழய பெயர்கள் இறந்துபட்டு, அநேக புதிய மொழி கள் தமிழ் பாஷையில் புகுந்தன என்பதை அறிகிருேம், ஆபரணம் என்பது சம்ஸ்கிருத பதம் அணிகலன் என்பது தமிழ் மொழியாம். கடைச் சங்க காலத்தில் வழக்கத்திலிருந்த பல ஆபரணங்கள், தற் காலத்தில் தமிழ் நாட்டில் மறைந்துபோயின. அவற்றில் சிலவற்றை இங்கு கூறுாேவம் - .
பீலி மகரவாள் மோதிரம் -கால்விரலணிகள் பாடகம், சதங்கை, க்ாஞ்சரி, சிலம்பு-கால் அணிகள் மேகலை -நுகப்பணிகள் குறங்கு செறி -துடையணி
வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டில் வழங்கிய சில ஆபரணங்களும் தற்காலம் மறையத் தொடங்கிவிட்டன. உதா ரணமாக :
தலைசாமான், மயிர்மாட்டி, தாயித்து, எள்ளுப்பூ, நோன்பு முடிச்சு, காது சில்லரை முதலியவற்றைக் கூறலாம்.
வழக்கற்றுப்போன முகத்தலளவு நீட்டலளவு இடை முதலிய மொழிகள்
கால மாறுதலிலுைம், அரசர்கள் மாறுதலிலுைம், வழக்கங்கள் மாறுதலினாலும், மேற் குறித்த மொழிகள் வழக்கற்றுப் போவதும், புதிய மொழிகள் புகுதலும் இயல்பேயாம். அடியிற்கண்ட சில பழய தமிழ் மொழிகள் வழக்கற்றுப் போயின என்று கூறலாம் -
அமைப்பு-ஓர் நீட்டலளவு சுமார் 35 முதல் 50 கஜம் வரையில் கொண்டது.
6
பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/44
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
