பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 இவருக்கு இப் பெயர் வந்ததெனவும் கூறுகிருர்கள் இன்னும் சிலர் இவரைக் கம்ப நாடர் கம்ப நாட்டாழ்வார் என்று கூறி யிருப்பதால் இவர் பிறந்த, அல்லது வசித்த தேசத்தினின்றும் இவருக்கு இப் பெயர் வந்திருக்கலாம் என்று எண்ணுகிருர்கள். (கம்பம் என்று ஒரு ஊர் தற்காலமும் தமிழ் நாட்டில் உளது. கம்ப நாடு என்றும் ஓர் நாடு உளது.) - - (2) ஒட்டக்கூத்தர் இவர் இயற் பெயர் கூத்தர் என்று சொல் லப்படுகிறது. இவரது தாய் தந்தையர் இவருக்குக் கூத்தர் என்று பெயரிட்டிருப்பார்கள் என்பது சந்தேகத்திற் கிடமாம்; சிலர் அம்பலக் கூத்தர் என்று சிவபெருமானுக்குப் பெயரிருத்தலால் கூத்தர் என்று குறுகிய பெயரா யிருக்கலாம் என்பார் சிலர். ஒட்டம் என்ருல் பக்த யம் என்று பொருள்படும். இவர் மற்றப் புலவர்களுடன் பந்தயம் வைத்துப் பாடியபடியால் இப் பெயர் இவருக்கு சிறப்புப் பெயரானது என்பார் மற்றவர்கள். சிலர் அந்த தலைகளை ஒட்டச் செய்ததினுல் ஒட்டக் கூத்தர் என்று இவருக்கு சோழ அரசர்கள் பட்டப் பெயர் கொடுத்தார்கள் என்று கூறுகிருக்கள். இது தற்கால ஆராய்ச்சிக்கு பொறுத்தமானதாயில்லை. - (3) புகழேந்தி புகழ் + எந்தி இதை நோக்கு மிடத்து இப் பெயர் சிலருக்கு இயற் பெயராகத் தோன்றவில்லை; சிறப்புப் பெய ராகத்தான் காண்கிறது. - (4) பரிமேலழகர் இவரது இயற் பெயர் அழகர் எனக் கூறப் பட்டிருக்கிறது. அழகர் மலே, அழகர் கோயில் என்பதைக் காண்க. பரிமேல் அழகர் என்பது இவர்து சிறப்புப் பெயராகும். ལ་ལ་མར་་་་་ (5) காளமேகப் புலவர் இது இவரது சிறப்புப் பெயராம் காள மேகம் ஜலத்தை வர்ஷிப்பது போல் கவிகளை வர்ஷிப்பவர் என்று பொருள்படும். இவர் ஜாதியில் வைஷ்ணவப் பிராம்மணர் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே இவர் பெயர் வேருக இருந்திருக்க வேண்டும், o . . . . . - - (6) சேக்கிழார் பெரிய புராணம் இயற்றியவர். இது இவரது குடிப்பெயரி னின்றும் வந்ததாம். குன்றத்துரில் சேக்கிழார் குடியென் றும் சைவ வேளாளர் வகுப்பில் பிறந்தமையால் இப்பெயர் பெற்றவர்