பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

z8 (23) சாக்கியர் இவர்கள் பழைய காலத்து சாக்கைக் கூத்தி னர் பிரிவாம். தற்காலமும் மலையாளத்தில் இப்பெயர் கொண்ட ஜாதி யர் இருக்கின்றனர். இம்மொழி சிலாக்கியம் என்பதின் திரிபு என சிலர் கூறுகின்றனர். - - . (24) சக்கிலியர் இவர்கள் தமிழ் நாட்டில் தோலில் வேலை செய்யும் ஜாதியர் : பழய நூல்களிலாவது பழய கல்வெட்டுகளிலாவது இவர்கள் ஜாதிப் பெயர் கிடைக்கவில்லை; இவர்கள் தெலுங்கு கன்னட தேசத்திலிருந்து வந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் பெயர் ஷட்குலி எனும் சமஸ்கிருத பதத்தினின்றும் வந்ததாக எண் ணப்படுகிறது. s (25) கிராமணி கிராம, மணிய வேலை பார்க்கிறவன் என்று பொருள் படும்; ஆயினும் தற்காலம் மது வியாபாரம் செய்பவர் களுக்கே இப்பெயர் தமிழ் நாட்டில் வழங்கப்படுகிறது. (2.6) ஒச்சன். உவச்சன் என்பது பழய மொழியாம். இம். மொழி ஓசை என்பதினின்றும் வந்ததாக சிலர் மதிக்கின்றனர். (27) சோனகர் என்பது யவனர் என்னும் மொழியின் திருபு என்று சிலர் மதிக்கின்றனர். . (28) தாசி. தாசன் என்பதின் பெண்பால், வேலைக்காரி என்று பொருள்படும் சமஸ்கிருதபதமாம். கோயில் வேலை செய்பவர்களுக்கு தேவதாசிகள் என்று பெயர், அவர்கள் சாதாரணமாக கற்பின் வரம் பைக் கடந்தவர்களாய் இருந்தமையால், தாசி என்கிற பதம் விலை மாது எனும் அர்த்தத்தில் வழங்கலாயிற்று. தேவடியாள் தேவர்-அடி யாள் என்பதைக் காண்க. - (29) மரக்காயர். தென் இந்தியாவில் தமிழைத் தமது தாய் பாஷையாகப் பேசும் சில மகம்மதியர்களுக்கு இப்பெயர் உண்டு. இவர்கள் பெரும்பாலும் ஆதியில் அரேபியா தேசத்திலிருந்து வர்த்தக களாக இங்கு வந்தவர்களுடைய சந்ததியார்கள். இப்பெயர் அராபிய பாலுைச் சொல்லாகிய மரக்காய என்பதினின்றும் வந்ததாம், மரக் காயர் என்ருல் படகு என்று பொருள்படும். படகு என்பதற்கு ஆதி தமிழ் மரக்கலம் என்று பெயரிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவர்