பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 மாம். பகோடா என்ருல் கோயில் என்று பொருள் ஆகும். அந்நாண யங்களின் மீது கோபுரம் பொறிக்கப்பட்டபடியால் அப்பெயர் வந்தது. தென்நாட்டில் கோபுரங்கள் விசேஷம் என்பதை கவனிக்க. பொன் நாணயங்களில் கோபுரங்களை முத்திரிக்கும் வழக்கம் விஜயநகர அர சர்கள் காலத்திலிருந்து வந்ததாக நம் அறிகிருேம். (78) காசிமாலை என்பது காசுமாலை யென்பதின் திரிபாம். காசு என்பது பழைய தமிழ்நாட்டில் வழங்கிய நாணயப் பெயராம். பொற் காசு, செப்புக் காசு எண்பதைக் காண்க. இக்காசுகளாலாகிய மாலைக்கு காசு மாலை எனப் பெயர் வந்தது. காசி rேத்திரத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. - (79) ரூபாய் என்பது ருப்யம் என்றும் சமஸ்கிருத மொழியி னின்றும், ஹிந்துஸ்தானி வழியாக வந்ததாம். ருப்யம் என்ருல் வெள்ளி. இது மகம்மதியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகுதான் பெரும்பாலும் வழங்கலாயிற்று. - (80) சுங்கம் கி. பி. பதினேராம் நூற்றண்டில் சில நாணயங் களின் பேரில் சுங்க என்று பொறிக்கப்பட்டிருந்தது. இது சுங்கம் எனும் பதத்தின் முதல் மூன்று எழுத்துக்களாகும். அக்காலத்தில் அரசாண்ட குலோத்துங்க சோழனுக்கு சுங்கம் தீர்த்தவர் என்று விருதுப் பெயர். ஆகவே அவன் நாணயங்களில் மேற்சொன்ன எழுத்துகள் பொறிக்கப்பட்டனவாம். - - - தமிழர்களுடைய பூர்வீக சிறந்த நாகரீகத்தை விளக்கும் மொழிகள் (81) கலங்கரை இப்பதம் பெரும்பாணுற்றுப் படையில் உப யோகிக்கப்பட்டிருக்கிறது. இதன் பொருள் இங்கு கரையுள்ளது என்று மாலுமிகள் அறியும்பொருட்டு உயரமாக விளக்கு வைக்கப் பட்ட இடம் என்பதாம். ஜீவகசிந்தாமணியில் கலங்கரை விளக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது; அன்றியும் சிலப்பதிகாரத்தில் தீகா என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருள். கப்பல்கள் திசை தப்பாமலிருப்பதற்காக பனைகளைக் காலாக நாட்டி அதன் மீது மண் வைத்து எரிக்கும் விளக்கு என்று கூறப்பட்டிருக்கிறது. இதல்ை பூர்வ