பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 காலத்தில் தமிழர்கள் கப்பல் யாத்திரை சாதாரணமாகச் செய்தனர் என்றும், அதற்காகவேண்டிய செளகர்யங்களை யெல்லாம் செய்து கொண்டனர் என்றும் ஸ்பஷ்டமாகிறது. கலங்கரை விளக்கம் என்பது கலங்+கரை-விளக்கம் என்று பிரியும், கப்பல்களுக்கு கரையருகி லுள்ளது என்று தெரியப்படுத்தும் வெளிச்சமாம். தீகா என்னும் மொழி மிகவும் அழகாய் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க கப்பலில் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு தீயிலைாகிய நாக்கைப் போல் தோன்றுமல்லவா ? w (82) காரானை என்ருல் கடலின் மீதிருந்து கீழிறங்கி நீரை முகந்து பெருந் தூணைப்போல் நிற்கும் மேகம் என்று பொருள். இதனை ஆங்கிலர் வாடர் ஸ்பெளட் (Water Spout) என்பர். இது சாதாரண மாகக் கப்பல் யாத்திரை செய்பவர்களுக்குத்தான் தெரியும். இது கட லில் அபூர்வமாகக் காணப்படும் காட்சியாம். இப்பூர்வீக பதத்தினுல் நமது முன்னேர்கள் இதை நன்ருயறிந்திருந்தனர் என்பது வெளி யாகும. (83) காவிதி இது ஒரு பூர்வீகமாக பதம், தற்காலம் வழக்கி லில்லை. இது வேளாளர்க்கு பாண்டிய அரசர்கள் கொடுத்த பட்டம் என்பதை தொல்காப்பியத்தின் உரையினின்றும் அறிகிருேம்; அன்றி யும், இப்பட்டம் பெற்றவர் அரசர்களிடமிருந்து அப்பட்டத்திற்கு அறி குறியாக ஒரு பொன் பூவையும் பெற்றனராம். அதற்குக் காவிதிப்பூ என்று பெயராம். தற்காலமும் ஆங்கில ராஜாங்கத்தார் ராவ் சாயபு, ராவ்பகதூர், திவான்பகதூர் முதலிய பட்டங்கள் அளித்து, அப்பட்டங் களுக்கு அறிகுறியாக வெள்ளி, பொன் பதக்கங்களையும் அளிப்பது போல, ஏறக்குறைய இரண்டாயிர வருடங்களுக்கு முன்னமே தமிழ் நாட்டில் இத்தகைய வழக்கம் இருந்தது என்பதை இதல்ை நாம் அறி கிருேம். அன்றியும் மேற்சொன்ன தமிழ் பட்டம் வைசிய மாதர்களுக் கும் தமிழ் அரசர்களால் அளிக்கப்பட்டது என்பதை பெருங் கதை மூலமாக அறிகிருேம். “ எட்டி காவிதிப் பட்டத் தாங்கிய மயிலியன் மாதர் ' என்று கூறியிருப்பதைக் காண்க. ஸ்திரீகளும் தமிழகத்தில் ஆதி காலத்தில் எவ்வளவு உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதை இதனுல் அறிகிருேம். சேரகோன், செம்பியன், தமிழ்வேள் என்கிற பட்டங்கள் பிற்காலத்து தமிழ் அரசர்களால் அளிக்கப்பட்ட பட்டப் பெயர்களாம். தென்னவன் பிரமராயன்