பக்கம்:தமிழ் அமுதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


சேர நாட்டுப் புலவர் ‘சேரர்’ என்றும் பெயர் பெற்றதில்லை. இவ்வாறே கம்பநாட்டுப் புலவர் ‘கம்பர்’ எனப் பெயர் பெறுதல் இயலாது. கம்பர் என்பது சுடலையாண்டிக் கம்பர், இராமையாக் கம்பர், முத்துக் கம்பர் என்றாற்போல ஓர் இனத்தவர்க்கு வழங்கும் பொதுப் பெயராகும். ஆகவே, சேக்கிழான் இராமதேவன் என்பவர் ‘சேக்கிழார்’ என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டாற் போலவே, இராமாயணம் பாடிய ஆசிரியர் ‘கம்பர்’ என்னும் பொதுப் பெயரால் அழைக்கப் பெற்றார் என்று கொள்ளுதல் தகும். கல்வியிற் சிறந்த உவச்சர் மரபைச் சேர்ந்த இராமாயண ஆசிரியர், அம்மரபுக்கு உரிய பட்டத்தால் அழைக்கப் பெற்றார் என்று கொள்வதே பொருத்த மானது. எனவே, கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப் பெறும் கம்பர் பெருமான் உவச்சர் மரபினர் என்று கொள்வது பொருத்தமேயாகும். அறிஞர் இதனை மேலும் ஆராய்வது நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/10&oldid=1355686" இலிருந்து மீள்விக்கப்பட்டது