பக்கம்:தமிழ் அமுதம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. ஒழுக்கக் கல்வி


சமயக் கல்வி

நம் நாட்டுத் தொடக்க நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி இவற்றில் சமயக்கல்வி கற்பிக்கப்படல் வேண்டும் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர். அக்கல்வி போதிக்கப்படின், மாணவர் ஒழுக்கம் வளரப்பெற்று நன்மக்களாக விளங்குவர் என்று அச்சிலர் கருதுகின்றனர். ஆயின், திட்டமாக இன்னமுறையில் அச்சமயக் கல்வி அமையவேண்டும், இன்னின்ன பொருள் பற்றிய பாடங்கள் அப்பாடத் திட்டத்தில் இடம் பெறுதல் வேண்டும் என்று தெளிவாகக் கூறினோர் எவருமில்லை.

கிறித்துவப் பள்ளிகளில் சமயபோதனை நடப்பதைப் போலப் பிற சமயத்தார் பள்ளிகளிலும், சமய போதனை நடைபெறவேண்டும் என்று இருபது ஆண்டுகட்கு முன் ஒரு கிளர்ச்சி நடந்தது. அதன் பயனாக இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் சமய அறிவு பரப்பப்பட்டது. இப் பாடத்திற்கென்று அமைந்த நூல்களுள் ஆரிய மத உபாக்கியாநம், ஆஸ்திக மத உபாக்கியாநம் என்பன குறிப்பிடத் தக்கவை. இந்நூல்களில் அமைந்த பாடங்கள் விதுரன் வில்லை ஒடித்தது, பரசுராமன் கர்வ பங்கம், திரெளபதி ஐவரை மணந்தது முதலியனவாகும். இப்பாடங்கள் எவ்வாறு சமய போதனையை வளர்க்க வல்லவை? ஆரிய மத உபாக்கியாநம் என்ற நூலைத் தமிழர் பார்த்ததும், “அது நமக்குத் தேவையில்லை; தமிழர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/25&oldid=1459145" இலிருந்து மீள்விக்கப்பட்டது