பக்கம்:தமிழ் அமுதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

கவரவல்லதாய் இயன்றுள்ள நூலே சிறந்த இலக்கியம் என்று துணியப்படும். அதுவே என்றும் இறவாத புகழுடையது. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம், தேம்பாவணி போன்ற இலக்கியங்கள் இவ்வகையில் அடங்கும்.

சமுதாய வாழ்வினை உள்ளவாறு எடுத்துக்கூறும் தொகை நூல்கள் முதல்தரத்தவை.

அரசர்க்காக எழுந்த போர், உலா முதலியனபற்றிய இலக்கியங்கள் சிறந்த நீதிகளைக் கொண்டவை அல்ல. அவற்றை இரண்டாந்தர இலக்கியம் என்று கூறலாம்.

சிறந்த படிப்பினைகளை உள்ளடக்கிய பெருங்கதைகளும், சிறுகதைகளும், பாடல்களும் மூன்றாந் தரத்தவை.

சமய வெறிகொண்டு கற்பனையையே உயிர்நாடியாக வைத்து மனித உணர்ச்சியோடு கலவாத முறையில் செய்யப்பெற்றுள்ள தலபுராணங்கள் நான்காந் தரத்தவை. 

சொல்லணிகளைக் காட்டவும் மனிதனது பலதிறப்பட்ட எழுச்சிகளை உணர்த்தவும் பாடப்பெற்ற 'கலம்பகம்’ போன்ற சிறு நூல்கள் ஐந்தாம் தரத்தவை.

ஒரு பயனுமின்றிப் பொழுதுபோக்குக்காகவே எழுதப்பட்ட இலக்கியம் கடைப்பட்டவை.

பல்வேறு நூல்களால் ஏற்படும் பயன்கள்

1. தொகை நூல்களால் அறியப்படுவன

1. சங்ககாலத் தமிழகத்தில் இருந்த பேரரசுகள், சிற்றரசுகள், அவற்றின் ஆட்சிமுறை — அரசர்தம் கல்வி, போர், கொடை முதலிய பண்புகள்.

2. புலவர்களின் இயல்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/68&oldid=1459187" இலிருந்து மீள்விக்கப்பட்டது