பக்கம்:தமிழ் அமுதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. இலக்கியம்-II

இலக்கியம் தோன்றுவதற்கான காரணங்கள்

1. அறிஞன் தன் ஆழ்ந்த எண்ணங்களை வெளிப்படுத்த இலக்கியத்தைத் தோற்றுவிக்கிறான்;

2. கடந்தகால திகழ்ச்சிகளைத் தன் கால மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களது வாழ்வைச் செம்மைப்படுத்த இலக்கியத்தைத் தோற்றுவிக்கிறான்;

3. தன்காலத்து நிகழ்ச்சிகளைக் கண்ணால் கண்டு அவற்றின் தன்மைகளை மக்கள் உணருமாறு செய்ய ஆர்வங்கொண்டு இலக்கியத்தைத் தோற்றுவிக்கிறான்;

4. மன்னர்கள், வள்ளல்கள் முதலியோரை இன் புறுத்தவும், இலக்கியத்தைத் தோற்றுவிக்கிறான்;

5. தன் சமயத்தைச் சிறப்பிக்கவும் பிற சமயங்களைத் தாழ்த்தவும் இலக்கியத்தைப் படைக்கிறான்; தன் கால நிலைக்கேற்ற — பெரும்பாலான மக்கள் விரும்பத்தக்க கருத்துக்களைக் கொண்ட — இலக்கியத்தை உருவாக்குகிறான்,

எது இலக்கியம் ?

மனிதன் செய்த நூல்கள் எல்லாம் இலக்கியம் என்று கொள்ளப்படும். ஆனால் சமுதாயத்தை உருப்படுத்தும் உயர்ந்த கருத்துக்களைக்கொண்டு மக்கள் உள்ளங்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/67&oldid=1459186" இலிருந்து மீள்விக்கப்பட்டது