பக்கம்:தமிழ் இனம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி 59

‘ கருத்துறு கணவற் கண்டபின் அல்லது

இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன்எனக் கொற்றவை வாயிற் பொற்றாெடி தகர்த்தும் ” - - கட்டுரை காதை போயினுள் என வருவது காண்க. இறுதியில் அவள் சேரநாடு சென்று வேங்கை மரத்தடியில் இருந்தபோதும் தாலி பற்றிய பேச்சே எழவில்லை. இதுகாறும் கூறியவற்றால், இளங்கோவடிகள் காலத் தில், கண்ணகி-கோவலன் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இல்லை என்பதே வலியுறுத்தப்படுதல் காண்க. இதனைச் சங்கச் செய்யுட்களைக் கொண்டும் நிறுவலாம். இதனை விரிப்பிற் பெருகும். கண்ணகி மணவினை நடந்த அன்றே அவளை ‘மங்கல நல்லமளி ஏற்றினர் ‘ என்பது சிலப்பதி காரம். இதுவே பண்டையமுறை என்பதை அகநானூற்று 86, 136-ஆம் பாக்களால் பாங்குற உணரலாம்

கண்ணகி இல்லறம்

கண்ணகியும் கோவலனும் நுகர்ந்த இல்லற இன்பம் அருகில் இருந்து கண்டவர் போல முற்றும் துறந்த இளங்கோவடிகள் மனமுருகக் கூறுந்திறம் படித்துப் படித்து இன்புறற்பாலது. மனையறம் படுத்த காதையுள் அகப்பொருட் செறிவனைத்தும் வரிதோறும் - சீர்தோறும் இலங்கக் காணலாம் ; இருவரும் கனிந்த காதலர்’ என்னும் உண்மை யையும் உணர்ந்து இன்புறலாம்.

• தாலி பற்றிய விரிவான ஆராய்ச்சியை இவ்வாசிரியர் எழுதியுள்ள ‘ தமிழர் திருமணத்தில் தாலி ‘ என்னும் நூலில் விரிவாகக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/56&oldid=1359568" இலிருந்து மீள்விக்கப்பட்டது