பக்கம்:தமிழ் இனம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி

63



“அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள்” ஆகிக்

கணவன் நிழல் போலப் பின்புறத்தொடுங்கி நின்றாள் என்பதிலிருந்து, “கணவன் நிழலே மனைவி” என்னும் உயரிய இல்வாழ்க்கைத் தத்துவத்தைக் கூறாது, தன் செயலால் உணர்த்துகிறாள் என்பதை மறுப்பாரும் உளரோ? அதுபோது தெய்வமாடிய சாலினி அவளை மட்டும் குறிப்பிட்டு,

“இவளே,
கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணி”

-வேட்டுவ வரி

எனப் பாராட்டுரை புகன்றாள் எனின், கண்ணகியின் பெருமையை யாதெனப் புகழ்தல் கூடும்!

பிரிவுறு காட்சி

இக்காட்சி ஒன்றே கண்ணகி வாழ்வில் இரண்டாந்தரத்தது. இதுவே நினைந்து நினைந்து இன்புறத் தக்கது ; கோவலன் உள்ளக் கிடக்கையும் கண்ணகியின் கற்பு நெறியும் விளக்கமுறச் செய்யும் இன்பப் பகுதியாகும். கோவலன் சிலம்பு கொண்டு புறப்பட ஆயத்தமானவன், தனது தவற்றை உணர்ந்து உருகுந்திறம் உணரத்தக்கது. “நல்ல ஒழுக்கத்தைக் கெடுத்த எனக்கு இனித் திக்கதியின்றி நற்கதி உண்டாமோ ? அதுதானு மன்றி, இருமுது குரவர்க்குச் செய்யும் ஏவலையும் பிழைத்தேன் ; நினைக்கும் சிறுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/60&oldid=1357016" இலிருந்து மீள்விக்கப்பட்டது