பக்கம்:தமிழ் இனம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி

65



இக்காட்சியில் உண்மைக் காதலர் உள்ளக் கிடக்கை உள்ளவாறு உணரக் கிடத்தல் காண்க.

வீர பத்தினி

சிலப்பதிகாரத்தில் ‘துன்பமாலை’ என்னும் பகுதியில், கற்பின் அமைதிக்கு இலக்கணமாகிய கண்ணகி வீரக் கற்பரசியாக வெகுண்டெழுதலைக் காண்கிறோம். “தன் கணவன் ‘கள்வன்’ என்று காவலன் கொலைபுரிந்தானாம் ! என்ன அநீதி! ”, என்று அலறியவளாய்ச் சென்ற கோலத்தை ‘ஊர் சூழ்வரி’ என்னும் பகுதி செவ்வையாகச் செப்புதல் காணத்தக்கது. அவளது துன்ப நிலையைக் கண்டு ஊரார் அழுது புலம்பினர் எனின், அவளது துன்ப நிலை எத்தகையதெனக் கூறுதல் இயலும் !

இறுதியில் கண்ணகி,கணவன் உடலைத் தழுவ, அவன் உயிர்பெற்றெழுந்தான் ; எழுந்தவன், “நிறைமதி வாள்முகம் கன்றியது” என்று கூறி, அவள் கண்ணிரைக் கையால் துடைத்தான். அவளோ அழுதேங்கி, நிலத்தில் வீழ்ந்து அவன் பாதங்களைத் தன் வளைக்கைகளால் பற்றினாள். அவன் “நீ இவண் இரு” எனக்கூறி மறைந்தான். ஈண்டு அவனது உள்ளப் பெருமையும், இவளது கற்பின் கவினும் நுணுகி ஆராயத்தக்கன : இறந் தெழுந்தவன் அவளது மலர் முகத்தைத் துடைத்தும், அவள் தன்னுயிரனையான் பாதங்களே பற்றெனக் கொண்டமையும் எண்ணி எண்ணி நயம் நுகரத்தக்கன.

கணவன் மறைந்ததும் மருண்ட கண்ணகி, பின்னர்த் தெளிவுற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/62&oldid=1359119" இலிருந்து மீள்விக்கப்பட்டது