பக்கம்:தமிழ் இனம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி

67

இனி அரிவைக்கும் அரசற்கும் அங்கு நடை பெற்ற உரையாடல் கவனிக்கத்தக்கது. கண்ணகியின் சொல்லாற்றல்-வீரம்-உண்மை உணர்த்த அஞ்சாமை போன்ற அருங்குனங்கள்-பெண்ணுக்கமைய வேண்டும் பெருங்குணங்கள் தெளிவுற விளங்கக் காணலாம். அவளைக் கண்டதும் பாண்டியன், “ நீருடைக் கண்களோடு வந்த நீயாவள் ?” என, அவள், “தேரா மன்னா !” எனச் சினத்துடன் விளித்துத் தான் பிறந்த சோணாட்டுப் பெருமையை முதற்கண் கூறிப் பின்பு தனது குடிப் பெருமை கூறி, அதன் பின்னர்,

“மாசாத்து வாணிகன் மகனை யாகி......... நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி ”

எனத் தன்னை அறிவிக்குந் திறம் காண்க. கண்ணகி, “மாசாத்து வணிகன் மகனை ஆகிநின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி” எனத் தன்னை அறிவிப்பதில், தன் மாமனார் பெயர் -கணவன் பெயர் இவற்றை அழுத்தந் திருத்தமாக அறைந்துள்ளமை அறிக. இக்காலப் பெண்டிர் உயிர் போவதாயினும் மாமனார் பெயர், கணவன் பெயர் கூற மறுக்கின்றனர். இப்பண்பு அக்காலக் கண்ணகியிடம் அமைந்திருக்கவில்லை என்பது அறியத்தகும்.

“கணவனைக் கொன்றமை நியாயமன்றாே ?” என்று அரசன் கேட்க, அதற்கு விடையளிக்காமல், கண்ணகி, “என் காற்சிலம்பு முத்துடை அரியே” எனக் கூறியது உன்னத்தக்கது. பாண்டியன் கூறிய சொல், ‘உண்மை உணர்ந்த பின்னரே சொல்லத் தகுவது’ என்பதே கண்ணகியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/64&oldid=1359127" இலிருந்து மீள்விக்கப்பட்டது