பக்கம்:தமிழ் இனம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



80

தமிழ் இனம்

தல் உள்ளத்தை உருக்குவதாகும்: "பால் அற்ற வறிய மார்பைச் சுவைத்த என் மைந்தன் வீட்டறையுள் இருந்த பாத்திரங்களைப் பார்த்து அழ, தாய் அவனது அழுகையை மாற்றப் 'புலி வருகிறது' என அச்சத்தை உண்டாக்கியும், 'மதியைப் பார்' எனப் பராக்குக் காட்டியும், அவன் அழுகை தணியானாய்ப் புலம்ப, தாய் விழி நீர் வார, "உனது வருத்தத்தை உன் தந்தையினிடம் காட்டு" என்றனள். இந்நிலையில் நான் குடும்பத்தை விட்டு வந்தேன்". (புறம்-160)

பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர், "என் வீட்டு அடுப்பில் காளான் பூத்தது. பசி அதிகரிப்பப் பாலின்மையால் தோலோடு திரங்கிப் பால் வருகின்ற கண்ணும் தூர்ந்த வறிய மார்பைச் சுவைத்துச் சுவைத்துப் பால் பெறாப் பாலகன் அழுவன். குழந்தை தாய் முகம் நோக்கி அழ, தாய் என் முகம் நோக்கி அழ, யான் நின் முகம் நோக்கி வந்தேன்," என்று ஒரு வள்ளலைப் பார்த்துக் குறையிரத்தல் எத்துணைக் கொடியதாகக் காணப்படுகிறது! (புறம்-164)

இப்பசிப்பிணியைப் பற்றியே மணிமேகலை நன்கெடுத்துக் கூறுகிறது. மணி பல்லவத் தீவில் தீவதிலகை என்பவள் மணிமேகலைக்குப் பசியின் கொடுமையைப் பற்றி விளக்குகையில்,

குடிபிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாளணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/77&oldid=1394132" இலிருந்து மீள்விக்கப்பட்டது