பக்கம்:தமிழ் இனம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலத்து அன்னதானம்

81

என்று உருக்கமாக உரைத்துள்ளாள். பசியின் கொடுமையைக் கோசிக முனிவன் நாயின் ஊனைத் தின்ன முயன்றான் ” என்பதாலும் அறியலாம். இக்கொடிய பசிப்பிணியைப் போக்கவல்லது உணவு ஒன்றே. அஃது ஆருயிரைத் தருவது. எனவே, அஃது ஆருயிர் மருந்து’ எனப்படல் பொருத்தமே அன்றாே? சாத்தனர் (மணிமேகலை ஆசிரியர்) உணவை ஆருயிர் மருந்து’ என எட்டு இடங்களில் ஆண்டிருத்தல் காணலாம். ஆருயிர் அளித்த மணி மேகலையையே, ஆருயிர் மருந்தே” என அவள் பாட்டன் விளித்தல் பின்னும் பாராட்டற்குரியது. (காதை 28, வரி 160) உணவையும் நீரையும் இம் மருந்து ‘ எனக் கோவூர் கிழார் கூறலும் கவனித்தற் குரியது. (புறம்-70)

உண்டிபெறத் தக்கவர்

“ சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளம்பட வாழ்நர்க்கு

என்பது புறப்பாட்டு (28).

“ காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசிநோய் உற்றாேர் மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் ”

என்பது மணிமேகலை (காதை 28, வரி 222-225). ஓடை கிழார் என்னும் புலவர், “ எம்போன்ற தகுதி வாய்ந்தவர்க்கு ஈவோர் பயன் கருதாது ஈவோர்

ஆவர். எம்மை ஒழிந்த பிறர்க்கு ஈவோர் பயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/78&oldid=1358897" இலிருந்து மீள்விக்கப்பட்டது