பக்கம்:தமிழ் இனம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



82

தமிழ் இனம்

கருதி ஈவோர் ஆவர்,"-எனக் கூறுதல் பன்முறையும் சுவைத்தற்கு உரியது. (புறம்-136)

மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்னோக் கினரே"

என இடைக்காடர் இயம்புவது உள்ளத்தை உருக்குவதாகும். (புறம்-42)

"கோடைக் காலத்துக் கொடுநிழல் ஆகிப்
பொய்த்தல் அறியா உறவோன்"

என்று பெருஞ்சித்திரனார் (புறம்-237) தம் வள்ளலைப் பாராட்டுதலை நோக்க, உள்ளம் உவகை கொள்கின்றது.

அறஞ்செய்யும் முறைமை

கோவலன் மகளாகிய மணிமேகலை வாழ்ந்த காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்தில் சுதமதி என்ற பார்ப்பனப் பெண்ணும், அவள் தந்தையும் தெரு வழியே வந்தனர். அப்பொழுது பசு ஒன்று பாய்ந்து அவள் தந்தையின் வயிற்றைக் குத்தி விட்டது. குடல் வெளியே வரப்பெற்ற அம்மறையவன் அவளுடன் அருகிலிருந்த சமண மடத்திற்குச் சென்றான். வைதிக சமயத்தைச் சேர்ந்த அவனைச் சமணர் மடத்திற்குள் புக விடவில்லை. அதனால் அவன் தன் மகளுடன் அழுது கொண்டே தெருவில் தள்ளாடி நடந்தான். அப்பொழுது நண்பகல் வெயில் கடுமையாக இருந்தது. அவ்வமயம் சங்க தருமன் என்ற பெளத்த முனிவன் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியவாறு அங்கு வந்தான். வெயில் கடுமையாக இருந்த அந்த நேரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/79&oldid=1394127" இலிருந்து மீள்விக்கப்பட்டது