உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இனம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலத்து அன்னதானம்

83

அவன் முகம் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைப் போலக் காட்சியளித்தது. அவன் விழிகள் கருணையைக் கக்கின. அப்பெரியோன், "உங்களுக்கு என்ன துன்பம் நேரிட்டது?" என்று அன்பு கலந்த அருள் மிகும் மொழிகளால் கேட்டு உண்மை உணர்ந்தான்; உடனே தன் கைப்பாத்திரத்தைச் சுதமதியின் கையில் கொடுத்தான் ; அவள் தந்தையைத் தழுவி எடுத்துத் தன் உடலின் மீது சுமந்து சென்று புத்த முனிவர்கள் வாழ்ந்த மடத்தை அடைந்தாள். அங்கு இருந்த முனிவர்கள் அம்மறையவனை அன்போடு வரவேற்று அவன் நோயைக் குணப் படுத்தினர்.

<poem>"அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்
பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையன்
என்னுற் றனிரோ வென்றெமை நோக்கி
அன்புடன் அளைஇய அருண்மொழி யதனால்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்துத்
தன்கைப் பாத்திரம் என்கைத் தந்தாங்கு
எந்தைக் குற்ற இடும்பை நீங்க
எடுத்தனள் தழீஇக் கடுப்பத் தலையேற்றி
மாதவர் உறைவிடங் காட்டிய மறையோன்
சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி
சங்க தருமன் தாமெனக் கருளிய..."

- மணிமேகலை, காதை 5 வரி 59.70

எனச் சுதமதி கூறுதல் அறம் செய்வோர் முறைமையை நன்கு விளக்குவதாகும்.

அறத்தின் அவசியம்

உண்டி இல்லாத மக்கட்கும், தாமாக வேலை செய்து சோறு பெற இயலாத மக்கட்கும் அறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/80&oldid=1394130" இலிருந்து மீள்விக்கப்பட்டது